போராளிகள் மீது தொடர்கின்ற அராஜகங்கள்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

தமிழீழ மாவீரர்நாள் அண்மித்துள்ள நிலையில் தாயகத்தில் சிங்கள இராணுவத்தின் கெடுபிடிகள் அதிகரிக்கப்பட்டு எமது விடுதலைப் போராளிகள் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர். வடக்கிலும் கிழக்கிலும் ஒவ்வொரு போராளிகள் கடந்த இரு கிழமைகளில் கொல்லப்பட்டுள்ள நிலையில் யாழ். பல்கலைக்கழகச் சூழலில் இராணும் மீண்டும் நிலைகொண்டுள்ளது. கடந்த காலங்களில் புலிகளுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் என்ற குற்றச்சாட்டில் பலர் கைதுசெய்யப்பட்டு பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

தாயகத்தில் போராளிகளுக்கு பாதுகாப்பில்லாத நிலையில் வறுமையின் பிடியில் சிக்கியுள்ள எமது போராளிகளை பயன்படுத்தி, அவர்களை இலக்குவைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் பயணம் தொடர்வதாலும் போராளிகள் மீது சிங்களத்தினால் கட்டவிழ்த்து விடப்படுகின்ற அராஜகங்கள் தொடர்கின்ற நிலையிலும் கூட்டமைப்பு தமது அரசியல் பரப்புரைகளுக்கு போராளிகளைப் பயன்படுத்துவதால் தமிழ் மக்கள் தொடர்ந்தும் அவலத்திற்குள் தள்ளப்படுகின்றனர்.
தமிழ் மக்களின் வாக்குகளில் சிங்களப் பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சியின் ஆசன வரிசைகளை அலங்கரிக்கின்ற கூட்டமைப்பின் ஆயுதப்போராளிகளும் இந்தவிடயத்தில் வெறுவாய் மெல்லுகிற நிலையில் சிங்களம் திட்டமிட்ட வகையில் தமிழீழ விடுதலைக்காக போராடி தாயகத்தில் சிங்களத்தின் பிடிக்குள் அகப்பட்டுள்ள தமிழ் மக்களை கொன்றுகுவிக்கும் சதித்திட்டத்தை அரங்கேற்றிவருகின்றது.

பாதுகாவலர்களின்றிய நிலையில் சிங்களத்தின் அராஜகங்கள் தொடர்வதால் முன்னாள் போராளிகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. இதேவேளை முன்னாள் போராளிகளின் குடும்பம் வறுமையின் பிடிக்குள் சிக்கியுள்ளதால் போராளிகள் மாற்று வழிகளின்றி விரும்பியோ விரும்பாமலோ கூட்டமைப்பின் நயவஞ்சக அரசிலுக்குள் அகப்பட்டு அவலப்பட வேண்டியவர்களாக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்க் கூட்டமைப்பு வடக்கில் மாகாண சபையின் ஆட்சியை கைப்பற்றிய பொழுது இதுவரைகாலமும் ஆயுதமேந்தி சுகந்திரத்தை நோக்கிய விடுதலைப் போராட்டத்திற்கு உதவிய போராளிகள் தமது வாழ்வாதாரத் தேவைகளுக்கு எதாவது செய்வார்கள் என்ற எதிர்பார்ப்பில் காத்திருந்தனர். ஆனால் வடக்கில் சிங்களக் குடும்பங்களுடன் திருமண உறவு ரீதியாக இனக்கலப்பிற்குட்படுத்தப்பட்ட முதலமைச்சர் விக்கினேஸ்வரன் நன்கு திட்டமிட்ட வகையில் போராளிகளை புறத்தொதுக்கி வடக்கின் பொருளாதாரக் கட்டமைப்பினைச் சிதைத்து வருகின்றார். புலம்பெயர்ந்த உறவுகள் வடக்கில் முதலீடுகளை மேற்கொண்டு தாயக மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் வடக்கு முதலமைச்சர் பல்வேறு தடைகளைப் பிரயோகித்துவருகின்றார். இந்நிலையில் கூட்டமைப்பின் முக்கிய தலைவர்களும் இவ்விடயத்தில் அரசியல் எதிர்காலத்;தைக் கருத்தில் கொண்டு மௌனமாக இருப்பதால் முன்னாள் போராளிகளின் வாழ்க்கை இருள் சூழ்ந்ததாகவுள்ளது.

போராளிகள், விடுதலைக்காக தமது உயிரையே தியாகம் செய்யத் துணிந்தவர்கள் என்ற சிந்தனையற்றவர்களாக பதவி நோக்கிய அரசியலில் ஈடுபட்டுவருகின்ற கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் பும்பெயர்ந்தவர்களின் நிதியைப் பெறுவதற்கு ஒரு முகத்தையும், தாயகத்தில் வேரொரு முகத்தையும், சிங்களத்தின் ஆசியைப் பெற்று தமது பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு வேறொரு முகத்தையும் காண்பிக்கின்ற கபடநோக்க அரசியல் சாணக்கிய வாதிகளாக மாறியுள்ளனர்.

இவர்களின் அரசியல் பயணம் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்தின் வீரஞ்செறிந்த ஒப்பற்ற தியாகத்தில் குளிர்காய்வதாக அமைந்துள்ளது. குறிப்பாக முன்னாள் போராளிகளை மதிக்கத் தெரியாத இத்தகையவர்கள் நிகழ்வுகளில் வடமாகாண சபையின் உறுப்பினராகவுள்ள அனந்தி போன்றவர்களுக்கு அருகில் நின்று புகைப்படங்களை எடுத்து ஊடகங்களில் பிரசுரிப்பதன் ஊடாக தமக்கும் தமிழ் மக்களின் அனுதாப வாக்குகள் கிடைக்கும் என்ற நம்பிகையுடன் சிங்களத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவான அரசியல் பயணங்களில் ஈடுபட்டுவருகின்றனர். இத்தகையவர்களின் கபடத்தனமான அரசியல் பயணம் முன்னாள் போராளிகளின் உயிரைக் குடிக்கின்ற அளவிற்கு தாகத்தின் நிலமையை மாற்றியுள்ளது.

கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னர் தாயகத்தில் தரையிலும் கடலிலும் ஆகாயத்திலும் விரவிளையாட்டுகளில் ஈடுபட்டு எமது கண்களுக்கு முன்பாகவே சிங்களத்தைக் கொண்றுகுவித்து எமது இனத்தின் விடுதலைக்காகப் போராடிய எமதருமைப் போராளிகள் இன்று நயவஞ்சகமான முறையில் முடக்கப்பட்டுள்ளனர். அதேபோல் கொல்லப்பட்டும் வருகின்றனர். அவர்களைக் காப்பாற்றுவதற்கு கூட்டமைப்பால் முடியவில்லை. ஆனால் சிங்களத்திடம் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை விற்று இலஞ்சமாக பணம் பெறுவதற்கு மட்டும் இவர்களால் முடிகின்றது.
தற்பொழுது இலங்கையின் அரசியலில் அதிகமாகப் பேசப்படுகின்ற விடயம் ஜனாதிபதித் தேர்தலாகும். இத்தேர்தலில் தமிழ்த் தேசயக் கூட்டமைப்பு யாரை ஆதரிப்பது என்ற முடிவினை இன்மும் அறிவிக்கவில்லை. ஆனால் கூட்டமைப்பின் சார்பில் ஈ.பி.ஆர்.எல்.எவ் சுரேஷ் பிரேமச்சந்திரன் சில நிபந்தனைகளை அறிவித்துள்ளார். ஆனால் தேசியக் கூட்டமைப்பிற்குள் சுமந்திரன், சம்பந்தன் போன்றவர்களின் அரசியல் அணுகுமுறைகள் ஜனநாயகப் பண்புகளற்றதாக இருக்கின்ற பொழுது சுரேஷ் பிரேமச்சந்திரனின் அறிவிப்பினை நாம் இறுதியானதாகக் கருதிவிடமுடியாது.

இருந்தாலும் சுரேஷ் பிரேமச்சந்திரன், சிறையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையையும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய அரசியலமைப்பு மாற்றத்தினையும் தமிழர் தாயகத்தில் நிலைகொண்டுள்ள இராணுவ வெளியேற்றத்தினையும் வலியுறுத்தியுள்ளார். இந்த விடயத்தில் அவருடைய சிந்தனையை பகுதியளவேனும் தமிழ் மக்கள் ஏற்றுக்கொண்டிருப்பார்கள்.

ஆனால் கூட்டமைப்பு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்தவிற்கு ஆதரவாகச் செயற்படுவதற்கான சமிக்ஞையை இந்த அறிவிப்பு வெளிக்காட்டியுள்ளது என்பது வெளிப்படையாகியுள்ளது. அதாவது, இலங்கையின் அரசியலில் பாராளுமன்றம் மஹிந்தவின் கூட்டு அரசியல் கட்சியின் பிடிக்குள் சிக்கியுள்ளது. இதேபோல் எதிர்க்கட்சிகளின் பலவீனத்தால் மஹிந்த இத்தேர்தலில் வெற்றிபெறுவதற்கான வாய்ப்பும் காணப்படுகின்றது. இந்நிலையில் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சி சார்பிலான வேட்பாளர் வெற்றிபெற்று ஜனாதிபதியாக பதவியேற்றாலும் பாராளுமன்றத்தின் அனுமதியின்றி அவரால் எதையுமே செய்துவிட முடியாது. நிறைவேற்று அதிகாரம் ஜனாதிபதியிடமிருந்தாலும் பாராளுமன்றின் ஊடாக அவரைக் கட்டுப்படுத்தவோ அல்லது அரசியிலில் குழப்பத்தை ஏற்படுத்தவோ முடியும். இந்தநிலை தமிழீழ விடுதலைப் புலிகளுடன் ரணில் மேற்கொண்ட பேச்சுவார்த்தைக்கு சந்திரிக்கா இடையூறுகளை ஏற்படுத்தியதைப் போன்றதொரு நிலையைத் தோற்றுவிக்கலாம்.

இதனை விளங்கிக்கொள்ள முடியாதவராக சுரேஷ் இக்கருத்தினைக் கூறியிருக்கமாட்டார் என்பதும் மக்களுக்குத் தெரியும். ஆனால் சுரேஷ் பிரேமச்சந்திரன் தமிழ்த் கூட்டமைப்பு என்றதெரு கட்சி இருக்கின்றது என்பதையும் அக்கட்சியில் சுமந்திரன், சம்மந்தன், மாவை தவிர்ந்த ஏனையவர்களும் இருக்கின்றோம் என்பதையும் பதிவுசெய்துள்ளார் அல்லது மஹிந்தவிற்கும் தமிழ்க் கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கும் ஞாபப்படுத்தியுள்ளார் என்பது வெளிப்படை. சுருங்கக்கூறின் ஜனாதிபதி தேர்தல்தொடர்பான அரசியல் பேரம்பேசலில் தம்மையும் இணைத்துக்கொள்ள வேண்டும் என்பதை சிலேடையாகத் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலைப் பொறுத்தவரையில் மஹிந்தவிற்கான வெற்றிவாய்ப்பு தற்பொழுதுவரை அதிகமாவுள்ளது. இந்நிலையில் அவரிடம் ஜனாதிபதியாக மீண்டும் பெறுப்பேற்ற பின்னர் தமது நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டுமெனக் கேட்பதற்குப் பதிலாக, தற்பொழுதே எமது நிபந்தனைகளைப் பூர்த்திசெய்தால் உங்களைத் தமிழ் மக்கள் ஆதரிப்பார்கள் எனக் கேட்டிருக்கலாம். அதுவே தமிழ் மக்களின் நலனையும் கருத்தில் கொண்டதாக அமைந்திருக்கும். நிறைவேற்ற வேண்டிய நிர்ப்பந்தம் மஹிந்தவிற்கும் ஏற்படடிருக்கும். ஆனால் தேசியக் கூட்டமைப்பு சார்பில் அக்கோரிக்கை விடுக்கப்படாது பேரம்பேசலுக்கான அழைப்பினை மட்டும் மஹிந்தவிடம் விடுத்துள்ளனர்.

இதேபோல் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து ஆயுதப் போராளிகளாக செயற்பட்டவர்களின் பாதுகாப்பும் தேசியக் கூட்டமைப்பால் கருத்தில் கொள்ளப்படவில்லை. போராளகளின் உயிரிலும் நலன்களிலும் உண்மையில் அக்கறை இருந்திருந்தால் அதனையும் சிறப்பான கோரிக்கையாக சுட்டிக்காட்டியிருக்க வேண்டும்.

இதுபோன்ற கூட்டமைப்பின் அரசியல் விடயங்கள் தொடர்பில் கூட்டமைப்பிற்கு ஆதரவும் நிதியும் வழங்குகின்ற பும்பெயர் தமிழ் அமைப்புக்களும் அக்கறையுடன் செயற்பட்டு தாயகத்தில் சிங்களத்தின் பிடிக்குள் சிக்கியுள்ள தமிழ் மக்களைப் பாதுகாக்க முற்படவேண்டும்.
எனவே தாயகத்தில் தமிழ் மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தி, முன்னாள் போராளிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்தி, தமிழ் மக்களுக்கான சுகந்திர தமிழீழ தாயகத்தை உருவாக்குவதற்கு எற்ற ஒழுங்குகளைச் செய்ய வேண்டியது கடமையை என்பதை உணர்ந்துகொண்டு நாம் அனைவரும் செயற்பட வேண்டும். இதுவே சிங்களத்தின் நயவஞ்சக சதியிலிருந்தும் தேசியக் கூட்டமைப்பின் வியாபார அரசியலிலிருந்தும் எமது இனத்தைக் காப்பாற்றி சுகந்திர தமிழீழத்தை அமைக்க உதவும் என்பதையும் நாம் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*