உருகும் பாவனா; ப்ளீஸ் புரிஞ்சுக்கங்க…!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

bhavanaacress

ஜல்லிக்கட்டு விஷயத்தில் த்ரிஷாவுக்கு ஆதரவாக விஜய் டிவி புகழ் பாவனா பேச, ட்விட்டரில் பாவனாவை வசைபாடி, அதற்கு அவர் பதில் கூறி என்று ஏக களேபரமாகி இருக்கிறது. பாவனாவை தொடர்பு கொண்டோம்.

ஜல்லிக்கட்டு

எந்த மனநிலையில் ஜல்லிக்கட்டு சம்பந்தமான போஸ்ட்டை ட்விட்டர்ல போட்டீங்க?

”முதல்ல என்னோட எண்ணத்தை நான் சொல்லிடுறேன். நம்ம நாட்டுல இருந்துட்டு, அதுவும் தமிழ்நாட்டுல இருந்துட்டு எப்படீங்க ஜல்லிக்கட்டுக்கு எதிர்ப்பா பேசுவேன் சொல்லுங்க. நிஜம் என்னனா த்ரிஷாவோட குடும்பத்தை எல்லாம் இந்த விஷயத்துல இழுத்ததைதான் நான் தப்புனு சொன்னேன். அவங்க எண்ணம் உங்களுக்கு பிடிக்கலைனா அந்த விஷயத்தை மட்டும் சொல்லுங்க. எதுக்கு குடும்பத்தை எல்லாம் இழுக்கணும். ஆனா என்னோட எண்ணம் புரியாம என்னையும் கண்டபடி திட்ட ஆரம்பிச்சுட்டாங்க ட்விட்டர்ல.

அதனாலதான் ஒரு பொண்னைப் பத்தி தப்பா பேசாதீங்க, குடும்பத்தை இதுல இழுக்காதீங்க. சோசியல் நெட்வொர்க்ல என்ன வேணும்னாலும் எழுதலாம்னு நினைக்காதீங்க. மத்தவங்களோட பர்சனல் நமக்கு எதுக்கு. இப்படித்தான் கேட்டிருந்தேன். இது தப்பா சொல்லுங்க? நாம தினமும் குடிக்கிறப் பால் சுத்தமான பால். அதுக்கு பசுக்கள் நல்ல ஆரோக்கியத்தோட இருக்கணும். தாய்ப்பால் கொடுக்கிற தாய்மார்கள் கூட பசும் பாலைத்தான் குடிக்கிறாங்க. அடுத்து வரக்கூடிய கன்னுக்குட்டி எல்லாம் ஸ்ட்ராங்கா பிறக்கணும். அதுக்கு காளை மாடுகள் ரொம்ப அவசியம். பால் கொடுக்குற மாட்டுக்கு எதாவது நோய் இருந்தால் அது பால் வழியா நமக்கும் வரும். இனத்தை பாதுகாக்கவேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கு. இது சம்பந்தமா நிறைய படிச்சிருக்கேன். எனக்கும் புரிதல் இருக்கு. அதனால் தான் என்னால அப்படி ஒரு போஸ்ட் போட முடிஞ்சது. நானும் உங்கப் பக்கம்தான் நிக்குறேன். ஆனா, இதைப் புரிஞ்சுக்காம கோபத்துல கண்ட மேனிக்கு திட்ட ஆரம்பிச்சிடுறாங்க.”

எப்படி இவ்வளவு பேர் உங்கப் பக்கம் திரும்பினாங்க?

”நான் போட்ட ஸ்டேட்டஸில் தப்பா சொல்லியிருந்தாக்கூட இவளோ திட்டுகளை எல்லாம் தாங்கியிருப்பேன். ஆனா நான் ஆதரவாதானே பேசினேன். நிஜமா தமிழ்ல இவளோ கெட்ட வார்த்தைகள் இருக்கும்னு இப்போதான் தெரிஞ்சது. என் கணவர், குடும்பம்னு எல்லாரையும் அத்தனை அசிங்கமா பேசிட்டாங்க. எனக்குனு பெரிய பேக்ரவுண்ட் எல்லாம் கிடையாது. நான் சாதாரண பொண்ணு மாதிரி வேலைக்கு போயிட்டு வர்றேன் அவளோதான். நான் இந்த விஷயத்துல நிறைய காயப்பட்டு போயிட்டேன். எனக்கு ஆங்கிலம்தான் அதிகமா தெரியும். ஆனாலும் தமிழை கத்துகிட்டு அதை தப்பில்லாம பேச முயற்சி பண்ணிட்டு வர்றேன். இன்னும் சொல்லப் போனா மும்பை போன்ற பெருநகரங்களில் நிகழ்ச்சிக்குப் போகும் போது கொடுக்கப்படும் பேட்டிகளில் கூட தமிழ் பெண்ணாக இருப்பதை பெருமையாக நினைப்பதாகவே பேசியிருக்கேன். அப்படி எப்போதும் தமிழ் உணர்வுடன் இருப்பவள் நான்.’’

வீட்ல உள்ளவங்க எப்படி எடுத்துக்கிட்டாங்க?

”இவ்வளவு பெரிய பிரச்னையாக வெடிச்ச பிறகும் உங்க கூட பேசறேனா, அதுக்கு அவங்க தான் காரணம். என்னோட ஃப்ரண்ட்ஸ், சொந்தக்காரங்க எல்லாரும் போன் பண்ணி ‘உடம்பெல்லாம் ஓ.கே வா, வீட்ல நல்லா இருக்காங்களா’னு பதட்டமா போன் பண்ணி கேட்குறாங்க. இன்னொரு பக்கம், ‘பாவனா தன்னோட பப்ளிசிட்டிகாக பண்றாங்க’னு சொல்றாங்க. நீங்களே யோசிச்சுப் பாருங்க யாராவது குடும்பத்தை விட்டுக் கொடுத்து, கூட இருக்கவங்கள தவறா பேச வச்சு, ஒரு பப்ளிசிட்டியைத் தேடுவாங்களா. என்னால சில விஷயங்களை ஜீரணிக்கவே முடியல. நாம எல்லாருமே சாதாரணமான மக்கள் தான்.’’

பிரபலங்கள் பலர் இது பற்றி வாய் திறக்காமல் இருக்கிறதா மக்கள் குற்றம் சாட்டுறாங்களே?

‘’மக்கள் நிறைய பேர் பிரபலங்களை தங்களோட இன்ஸ்பிரேஷனா எடுத்துட்டு இருக்காங்க. வாழ்ந்துட்டு இருக்காங்க. அவங்க நியாயமா இருக்கணும். நியாயத்துக்காக போராடணும்னு எதிர்பாக்கிறாங்க. படங்கள் வரும் போது சப்போர்ட் பண்ணுங்கனு அவங்க மக்கள்கிட்ட கேட்கும் போது, அதற்கும் ஆதரவா இருக்கணும்னு எதிர்பார்க்கிறாங்க. இது தப்புக் கிடையாது. அப்படி பேசாம இருக்கும் போது மக்களுக்கு கோபம் வருது அவ்வளவுதான். இப்போ இருக்கிற சூழ்நிலையில் மத்தவங்களுக்கு சப்போர்ட் பண்ணாலும் தப்பு, பண்ணலைனாலும் தப்பு என்கிற நிலை வந்துடுச்சு. இவ்வளவு பெரிய கலவரம், போராட்டம் நடக்கும் போது, நான் இவ்வளவு பெருமையா நினைக்கிற ஒரு பிரபலம் ஏன் பேசாம இருக்காங்கனு என்கிற ஆதங்கம் இருக்கும் போல. கோபம், வெறி, ஆவேசம், உணர்ச்சி எல்லாமே எனக்கும் புரியுது. அலங்காநல்லூர் கண்டிப்பாக போகணும்னு விருப்பம் இருக்கு. ஆனா, அதுக்கு சூழ்நிலை இடம் கொடுக்கல. அதனால என்னால போக முடியல.’’

உங்களுக்கு ஆதரவா இருக்கும் பிரபலம்?

’’ த்ரிஷாவை எனக்கு ரொம்ப வருஷமா தெரியும். மீடியாவுக்குள்ள வரதுக்கு முன்னாடியே அவங்களையும், அவங்க குடும்பத்தில் உள்ளவங்களையும் நல்லாத்தெரியும். ஆனா இதுவரைக்கும் நாங்க இரண்டு பேரும் போட்டோ எடுத்து போஸ்ட் போட்டு பிரபலப்படுத்தினது இல்ல. இப்பவும் எனக்கு மறைமுகமாக நிறைய பேர் சப்போர்ட் பண்ணிட்டு தான் இருக்காங்க. இவ்வளவு பெரிய ரணகளத்தில் இருக்கும் போது நான் என் தலையை கொடுக்கணுமானு யோசிக்கிறேன்னு வெளிப்படையா சொல்லப் பயப்படுறாங்க. மத்தப்படி, போன் கால்ஸ், மெசேஜ் என விசாரிச்சுக்கிட்டேதான் இருக்காங்க. நாங்க எல்லாம் வளர்ந்து வரும் கலைஞர்கள். என்னால போஸ்ட் போடுறதைத் தவிர வேற என்ன செய்ய முடியும்?’’ என ஆதங்கத்துடன் முடித்தார் பாவனா.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit