டொனால்ட் டிரம்ப்பிற்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்…!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக இன்றைய தினம் பதவிப் பிரமாணம் செய்துகொண்ட டொனால்ட் டிரம்ப்பிற்கு எதிராக ஸ்ரீலங்காவில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய சோஸலிசக் கட்சியின் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்திற்கு முன்பாக இன்றைய தினம் பகல் இடம்பெற்றது.

ஐக்கிய தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் லீனஸ் ஜயதிலக, ஊடகத்துறை ஊழியர் தொழிற்சங்க சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் தர்மசிறி லங்காபேலி உள்ளிட்ட பலரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு எதிரான கொள்கையை கடைபிடிக்கும் டிரம்ப்பிற்கு எதிரான வாசகங்கள் எழுந்தப்பட்ட சுலோக அட்டைகளையும், டிரம்;ப்பிற்கு எதிராக ஸ்ரீலங்கா மக்களின் எதிர்ப்பை வெளிப்படுத்துவதாக எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தின்போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட ஐக்கிய சோஸலிசக் கட்சி தலைவர் சிறிதுங்க ஜயசூரிய –

“டிரம்ப்பிற்கு ஏன் நாங்கள் எதிர்ப்பு? அவர் தற்போது உலகப் போருக்கு அழைப்பு விடுக்கின்றார்.

அந்தப் போர் கொரியாவிலேயா அல்லது சீனாவிலிருந்தா ஆரம்பிப்பது குறித்து பாரிய ஆபத்து காணப்படுகின்றது. உலகப் போர் எங்கிருந்து ஆரம்பிக்கப்பட்டாலும் அபிவிருத்தியடைந்து வருகின்ற எம்மைப்போன்ற நாடுகளுக்கு பாதிப்பு ஏற்படும். ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு உயிரைப் பாதுகாத்துக் கொள்வதற்காக செல்கின்ற அகதிகளுக்கு எதிரான கொள்கையையே டிரம்ப் கடைபிடிக்கின்றார்.

மறுபுறம் முஸ்லிம்களுக்கு எதிரான கொள்கை. ஓரிச்சேர்க்கை சட்டத்திற்கு எதிரான மனோபாவத்துடன் செயற்படுகின்றார்.

பெண்கள் துஸ்பிரயோன சிந்தனையில் டிரம்ப் இருப்பதாக அமெரிக்க மக்களிடையே சாதாரண குற்றச்சாட்டு நிலவிவருகின்றது. எனவே டிரம்ப் ஆட்சிக்குவந்து ஒட்டுமொத்த அமெரிக்காவின் பொருளாதாரத்தையும் வீழ்த்தப் போகின்றார்.

அமெரிக்காவின் பொருளாதாரம் டைட்டானிக் கப்பலைப் போன்று மூழ்கப்போகின்றது. எதிர்வரும் 2020ஆம் ஆண்டில் உலகப் பொருளாதாரத்தில் உச்கட்டத்தை அடைவதற்கான இலக்கை சீனா கொண்டிருக்கின்றது.

எமது நாட்டில் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்ற இனவாதிகள் டிரம்ப் ஆட்சிக்கு வந்ததையிட்டு பெருமைபாராட்டிக் கொள்கின்றனர்.

ஆனால் உலக அழிவிற்கே டிரம்ப் அனைவரையும் இட்டுச்செல்வார். அதேபோன்று ஸ்ரீலங்காவையும் அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்லும் அபாயமும் காணப்படுகின்றது” – என்றார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*