2 வயது குழந்தை சாலையில் பைக் ஓட்டிய அதிசயம்! (வைரலாகும் வீடியோ)

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

bikeride-2-age-childs

தாய்லாந்தில் நடு இரவில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சி ஒன்று தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

அதில், நபர் ஒருவர் தன் இரண்டு வயது குழந்தையுடன் இரு சக்கர வாகனத்தில் சாலையில் செல்கிறார். வாகனத்தின் முன்னால் அந்த குழந்தை உட்கார்ந்துள்ளது.

இரு சக்கர வாகனத்தின் கைப்பிடி ஆக்சிலேட்டரை அந்த குழந்தை தன் கையால் இயக்க, குழந்தையின் தந்தை செல்பி முறையில் வீடியோவாக அந்த நிகழ்வை பதிவு செய்துள்ளார்.

மிதமான வேகத்தில் குழந்தை இருசக்கர வாகனத்தை இயக்குவது போல அந்த வீடியோவில் உள்ளது.

குழந்தையின் தந்தை செய்த இந்த விபரீத செயல் சட்ட விதிமுறைப்படி அவருக்கு பிரச்சனையை ஏற்ப்படுத்தும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

ஆனால், தாய்லாந்து நாட்டில் போக்குவரத்து விதிமுறை சட்டத்துக்கு பொலிசார் குறைந்த அளவிலேயே முன்னுரிமை தருகிறார்கள்.

தாய்லாந்து நாட்டில் வருடத்துக்கு 24000 பேர் சாலை விபத்தில் உயிரிழக்கிறார்கள் என்பதும், உலகிலேயே மோசமான சாலை பாதுகாப்பில் இந்த நாடு இரண்டாவது இடத்தில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit