எனது வாழ்க்கையை திருப்பி போட்ட ஒரு நாள் இரவு: அபலையின் கண்ணீர் வார்த்தைகள்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

ஆண்கள் மற்றும் பெண்கள் என வேறுபட்ட பார்வை கொண்ட இந்த சமூகம், கற்பழிப்பு குற்றவாளியை விட, கற்பழிப்புக்கு ஆளான பெண்களை தான் கேவலமாக சித்தரிக்கிறது.

உல்லாசத்தில் ஈடுபட்ட அவன் உலகத்தில் சுதந்திரமாய் சுற்றும்போது, தவறுகள் எதுவும் செய்யாமல் வீட்டுக்குள்ளேயும், மனதளவிலும் சிறை தண்டனை அனுபவிக்கும் கொடுமை பெண்களை சென்றடைகிறது.

அப்படி பலாத்காரத்திற்கு ஆளான ஒரு அபலை பெண்ணின் கண்ணீர் கலந்த வரிகள் இதோ,

என் வாழ்க்கை எனக்கு திரும்ப கிடைக்காதா….நண்பர்களுடன் சுற்றித்திரியும் காலம் என்னை வந்து சேராதா என்ற எதிர்பார்ப்புடன் ஒவ்வொரு விடியலையும் எதிர்நோக்கி காத்திருக்கிறேன்.

எனது வாழ்விலும் காதல் என்ற ஒன்று இருந்தது. நானும் ஆத்மாத்தமாக ஒருவரை காதலித்தேன். ஆனால் பலாத்காரம் எனும் கொடிய ஒன்று எனது வாழ்க்கையில் நடந்து எனது வாழ்வினை இருட்டாக்கும் என கனவிலும் நினைத்து பார்க்கவில்லை.

அன்று எனது வாழ்க்கையை புரட்டி போட்ட நாள்…நண்பர்களுடன் சேர்ந்து மதுவிருந்து ஒன்றிற்கு சென்றிருந்தேன். ஒழுக்கமான குடும்பத்தில் பிறந்து வளர்ந்த பெண் என்பதால், இது போன்ற விருந்தில் கலந்துகொண்டது கிடையாது.

அன்று எனது நண்பர்கள் என்னை ஆசைப்பட்டு அழைத்த காரணத்தால், மறுக்க முடியாமல் சென்றேன். இரவு விருந்து முடிய கொஞ்சம் நேரமாகிவிட்டது.

அந்த தெருவில் ஆட்டோ ரிக்ஷா கிடைக்குமா என்பதற்காக தனியாக நடந்து கொண்டிருந்தேன். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை அப்படி ஒரு வண்டியும் தென்படவில்லை. ஏதோ சரியானதாக இல்லை என்ற உள்ளுணர்வு மட்டும் தோன்றியது. ஒரு நபர் என்னை பின்தொடர்ந்து வந்துக் கொண்டிருந்தார். நான் ஓடினேன், அவன் என்னை விட வேகமாக துரத்தினான்…”

அவன் மிகவும் பெரியவனாக இருந்தான், என்னை தரையில் தள்ளி வீழ்த்தினான். உதைத்தும், அடித்தும், எத்தனை முயற்சித்தும் அவனது பிடியில் இருந்து என்னால் வெளிவர முடியவில்லை. ஒரு கட்டத்திற்கு மேல், வலுவிழந்து போனேன்… மூச்சு விடக்கூட முடியாத சூழலில் இருந்தேன். என்னால் அவனிடம் இருந்து தப்ப முடியவில்லை. அவனால் நான் இழந்தது என்னை மட்டும் அல்ல, என் வாழ்க்கையும் தான். அவன் நகர்ந்து சென்ற பிறகு நான் ஒரு உயிர் உள்ள பிணமாக தெருவில் கிடந்தேன்….”

இப்படி ஒரு சம்பவத்தால் எனது பெற்றோர் மற்றும் காதலனால் புறந்தள்ளப்பட்டு நடைபிணமாக வாழ வேண்டிய நிலைக்கு ஆளானேன். ஒவ்வொரு நாள் விடியலும், எனக்கானதாக இருக்காதா? என் வாழ்க்கை மீண்டும் என் கைகளில் அகப்படுமா? என்ற நம்பிக்கையில் நாட்களை கழித்துக்கொண்டிருக்கிறேன்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*