விலைமாதுவாக மாறிய தன்ஷிகா!!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

தமிழ் சினிமாவில் விலைமாது கதாபாத்திரத்தில் நடிகை ஸ்ரீபிரியா, சரண்யா, சினேகா, அனுஷ்கா, சங்கீதா ஆகியோர் துணிச்சலாக நடித்திருந்தனர். அந்த வரிசையில் தற்போது தன்ஷிகாவும் களமிறங்கியிருக்கிறார்.

இவர் குறும்படம் ஒன்றில் விலைமாதுவாக நடித்திருக்கிறார். 25 நிமிடங்கள் ஓடக்கூடிய அந்த குறும்படத்திற்கு ‘சினம்’ என்று தலைப்பு வைத்துள்ளனர்.

ஆவணப்பட இயக்குனரான பெங்காலி நடிகை பிடிட்டா பேக்கும் தன்ஷிகாவுடன் இணைந்து விலை மாதுவாக நடித்துள்ளார்.

இந்த குறும்படத்தை லண்டனில் வசிக்கும் நேசன் திருநேசன் தயாரிப்பில் ஆனந்த் மூர்த்தி என்பவர் இயக்கியிருக்கிறார். இதற்கு இசையமைக்க பிரபல இசையமைப்பாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இந்த குறும்படம் பற்றி இயக்குனர் கூறும்போது, ‘மேற்கு வங்காளத்தில் வாழும் ஒரு விலை மாதுவை சந்திக்கிறார் ஒரு ஆவணப்பட இயக்குனர். அந்த பெண் அந்த தொழிலில் தள்ளப்பட்ட காரணத்தை அறிந்துக்கொள்ளும் இயக்குனர் இறுதியில் யாரால் அவள் இந்த நிலைக்குள்ளானாள் என்பதை கண்டு அதிர்ச்சியடைகிறாள்.

கதைப்படி இருவரும் பெண்ணை கடவுளாக வணங்கும் மதத்தை சார்ந்தவர்கள். அண்டை மாநிலத்திலிருந்து வந்த பெண் எவ்வாறு இந்த நிலைக்கு தள்ளப்பட்டாள், ஒரு பெண் சமுகத்தில் எதிர்கொள்ளும் அன்றாட பிரச்சனைகளை விளக்கும் குறும்படம்தான் இது’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*