தமிழகம் முழுவதும் தீப்பற்றி எரியும் ஜல்லிக்கட்டு போராட்டம்!

பிறப்பு : - இறப்பு :

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க கோரி மாநிலம் முழுவதும் மாணவர்கள், பொதுமக்கள் என போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, சேலம் என பல மாவட்டங்களில் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.

சென்னை மெரீனாவில் போராடி வரும் மக்கள் மூன்று கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து 24 மணிநேரத்திற்கும் மேலாக போராடி வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்தில் மாணவர்கள் நடத்தும் போராட்டத்தில் தலையிட முடியாது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் தலையிட முடியாது என நீதிபதி கவுல் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடக்கும் போராட்டம் குறித்து தலைமைச் செயலகத்தில் டி.ஜி.பி ராஜேந்திரனுடன் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆலோசனை நடத்தி வருகிறார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit