ஜி.எஸ்.பி பிளஸ் சலுகையால் மாத்திரம் நன்மையுண்டா?

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

அனைத்து விடயங்களையும் விட்டுக்கொடுத்துவிட்டு தற்காலிக நன்மையை பெறுவதற்காக ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையின் ஊடாக அரசாங்கம் தமது பணிகளை மேற்கொண்டு வருவதாக பேராசிரியர் உதய ஶ்ரீ காரியவசம் குற்றம்சுமத்தியுள்ளார்.

ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை இலங்கைக்கு கிடைத்தால் பொருளாதாரம் உயரும் என அரசாங்கம் கூறுகின்ற போதும் உண்மையிலும் நாட்டின் தனிநபர் வருமானம் உயரும் பட்சத்தில் ஜி.எஸ்.பி பிளஸ் சலுகை கைநழுவிப் போகும் என அவர் குறிப்பிட்டார்.

பொதுஜன முன்னணியின் இன்றைய (15) புத்திஜீவிகளின் கலந்துரையாடலின் போதே பேராசிரியர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் தற்போது ஏற்றுமதி வருமானம் 15% சதவீதத்தால் குறைவடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நல்லாட்சி அரசாங்கம் நடைமுறைக்கு ஏற்ற வகையிலான முறையில் பயணிக்க வேண்டும்.

ஆனால், பொதுமக்களை ஏமாற்றும் வகையில் அரசாங்கம் செயற்பட்டு வருவதாக பேராசிரியர் குற்றம்சுமத்தினார்.

நாட்டில் நிலவிய யுத்த சூழ்நிலை காரணமாக ஜி.எஸ்.பி பிளஸ் சலுகை கைநழுவிப் போனது

ஜி.எஸ்.பி பிளஸ் சலுகை கிடைப்பதற்கு தற்போது பரிந்துரைக்கப்பட்டுள்ளமையை சமகால அரசாங்கம் வெற்றியாக கருதுகின்ற போதும், உண்மையில் ஜி.எஸ்.பி பிளஸ் இல்லாத தருணத்திலும் நாட்டின் வருமானம் உயர்ந்தே காணப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் ஜி.எஸ்.பி பிளஸ் மீண்டும் கிடைக்கும் தருணத்தில் ஐரோப்பிய நாடுகள் என்ற வகையில் இல்லாமல் செயற்பட வேண்டும் என பேராசிரியர் உதய ஶ்ரீ காரியவசம் குறிப்பிட்டார்.

நிலையான அபிவிருத்தி, மனிதவுரிமை, தார்மீக உரிமை, சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் நல்லாட்சி ஆகிய விடயங்கள் கருத்தில் கொள்ளப்பட்டே ஜி.எஸ்.பி பிளஸ் சலுகை வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*