விடுதலைப் பொங்கல்!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

ltte_girls

சங்கத் தமிழ் வாழ்ந்திட்ட
உலகின் முதற்குடிகண்ட மூத்த இனம்
உயர்ந்த பண்பாடு ஒப்பில்லா நாகரிகம்
வையம் போற்றும் வள்ளுவம்
வாழ்க்கை நெறிக்கு அகம்-புறம் ஆயிரம்
அழகு தமிழ் தோற்றம் முதல்
அடுக்கிச் செல்லலாம் தமிழர் பெருமைகளை……

கதிரவன் துணையிருக்க
மும்மாரி மழைபொழிய
நிலம் குளிர்ந்து போக
கையிலே ஏர் பிடிச்சு
களைபிடுங்கி நாத்து நட்டு
கதிரறுத்து சுமைதூக்கிய சூடடிப்பு
வையத்துக்கே சோறு போடும்
கதிரவன் எழுமுன்
கோலம் போட்டு கோலாகலமா
புதுப்பானையில் கோலமிட்டு
மஞ்சள் கொத்து அதில் கட்டி
ஊரே அமர்க்களப்படும்
உழவர் திருநாளாயிற்றே …..

உலையில் பால் பொங்க
பட்டாசு ஓசை வானைப்பிளக்க
உழைத்துக் களைத்த காளைகளுக்கும்
ஒய்யாரமாய் பொங்கிடுவர் கன்னியர்
பால் தரும் பசுவுக்கும்
துள்ளி விளையாடிய கன்றுக்குட்டிக்கும்
ஜல்லிக்கட்டில் குளிப்பாட்டி
புதுக் கயிறும் மணியுமிட்டு
பட்டுக்கட்டி கொம்பு சீவி
காளைக்கும் வண்ணம் தீட்டி
நெற்றிதனில் வெற்றித் திலகமிடு
எல்லாத் திக்கிலும் பட்டி பொங்கும்………

பகைமைக்கும் பழைய குப்பைக்கும் நெருப்பிட்டு
பழையன கழிந்து புதியன புகுந்திட
பொல்லாங்கெல்லாம் பொசுங்கப்போக
குடும்பத்தோடு உறவுகளும் கூடிக்களித்திட
பெரியோர் பாதம் பணிந்து
அன்பைப் பகிர்ந்து பண்பைப் பேணி வாழ்த்தும்….

ஒருமைப்பாட்டை வளர்த்து
பங்கெடுத்து பண்ணிசைத்து
நன்றி நவிலவும் கூடிடவே
துன்பமெல்லாம் மங்கட்டும் – தரணியிலே
இன்ப வெள்ளம் பொங்கட்டும்
அகத்தில் ஆரோக்கியம் முகத்தில் சிரிப்புமாய்
வாழ்வில் மகிழ்ச்சி பொங்கிட
சங்கத் தமிழன் வாழ்ந்தானென்று
தரணியைத் தழைக்கச் செய்திடுவான் …..

உதிரம் ஊற்றியதால் உருவான
உன்னதத் தமிழ் ஈழத்தை –
உணர்வில் கலந்து பேணிக்காக்க
ஆதவனிற்கும் அன்னை பூமிக்கும்
நன்றி தெரிவிக்கும் தமிழ் தேசிய திருநாள்….

– நிஜத்தடன் நிலவன் –

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit