நீ வருவாயென….

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

pongal-day

நீ வருவாயென….
உள்ளத்து மூச்செடுத்து
உவகையொடு பேச்சிணைத்து
உயிர் வேதம் உருவாக்கி
உனக்காக காத்திருந்தோம்
தை திருநாளே நீ வருவாயென…..

அகிலம் யாவும் ஒளியேற்றி
அகிம்சை எண்ணம் அதில் சூடி
அன்னை தந்தை நினைவேந்தி
அரும்பும் ஆசை நிறைவாக்கி
அழைத்து நின்றோம் தை
திருமகளே உன் வரவெழுதி…

காலை கதிரை வரவேற்று
கருணை மனுவை கரமேந்தி
கவலை போக்கும் மருந்தாக
காலம் நேரம் பல காத்து
கரங்கள் கோர்த்து வரவேற்றோம்
தை திருநாளே நீ வருவாயென…..

பொங்கலிட்டு படையலிட
பொங்கும் ஆசை நிறைந்திடவே
மங்கா புகழை பெற்றிடவே
மாதவ வாழ்வை சிறக்க வைக்க
மங்களம் சூடி மனம் நிறைய
காத்திருந்தோம் நீ வருவாயென…..

–  சிவதர்சினி ராகவன் –

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit