பொங்கல் அரிசியின் விலை ஏற்றத்தால் பொது மக்களுக்கு பாதிப்பு!

பிறப்பு : - இறப்பு :

முல்லைத்தீவு வர்த்தக நிலையங்களில் பொங்கல் அரிசியானது ஒரு கிலோ 85 ரூபா வரை விலையேறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் நாளைய பொங்கல் தினத்தை அனுஷ்டிப்பதற்கு வறுமைக் கோட்டின் கீழ் வாழும் பொது மக்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாகத் குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை நாளைய பொங்கல் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவு விவசாயிகள் சிலர் வர்த்தக நிலையங்களில் விலை கொடுத்து அரிசி வாங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இம்முறை பெரும் போக நெற்செய்கையின் போது வயல்கள் பாதிக்கப்பட்டதன் காரணத்தினாலே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக மேலும் கூறப்படுகின்றது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit