அனைத்து உறவுகளுக்கும் தித்திக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள். -அமைச்சர் பா.டெனிஸ்வரன்.

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

denis-waran-pongal-wishes

தை பிறந்தால் வழிபிறக்கும், விழி திறந்தால் வழி கிடைக்கும், பொங்கல் பொங்கினால் இன்பம் பொங்கும் என்பது சான்றோர் வாக்குக்கு, தமிழர் பண்பாடு, கலாசாரம் என்பதை கட்டி காக்க வேண்டியது தமிழர்களாகிய நம் அனைவரினதும் கடமை. விழாக்கள், பண்டிகைகள் என்பன நம் அடையாளங்கள். அந்த வகையில் தை பொங்கல் எமது கலாசாரத்தில் முக்கியமான ஒரு விழாவாகும்.உழவர்கள் தமக்கு நன்மை பகிர்த்த சூரியபகவானுக்கு நன்றி செலுத்தும் இவ்விழாவானது தமிழர்களாகிய எமது நற்பன்பினை உலகிற்கு எடுத்துக்காடுகின்றது.

துரதிஸ்டவசமாக இவ்வருடம் பருவமழை பொய்த்ததனால் எமது விவசாயிகள் பல துன்பங்களை அனுபவித்து வருவது மிகவும் வேதனையளிக்கும் நிகழ்வாகும், இருப்பினும் எமது கலாச்சாரத்தினை கட்டிக்காக்கவேண்டியது எமது தலையாய கடமையாகும்.எனவே இன, மத வேறுபாடுகள் மறந்து தேவையற்ற களியாட்டங்களை தவிர்த்து அயலவர்களுடன் ஒற்றுமையாக எமது அடையாளங்களில் ஒன்றான இவ்விழாவினை கொண்டாடுமாறு கேட்டுக்கொள்ளுவதோடு, அனைத்து உறவுகளுக்கும் எனது தை பொங்கல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

என்றும் உங்கள் சேவையில் உள்ள,
அமைச்சர் பா.டெனிஸ்வரன்

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit