
போலி 5 ஆயிரம் ரூபா நாணயத்தாள்களை அச்சிட்டு அதனை பயன்படுத்தி ஹெரோயின் போதைப் பொருளை நுகர்ந்து வந்த இரண்டு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த சந்தேக நபர்கள் களுத்துறை வடக்கு பிரதேசத்தில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடம் இருந்து போலியான 57, 5 ஆயிரம் ரூபா நாணயத்தாள்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.