காப்புரிமை போரில் விழி பிதுங்கும் மொபைல் நிறுவனங்கள்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

தமது கண்டுபிடிப்புகளுக்காக பெறும் ஒரு உரிமையே காப்புரிமை என்று அழைக்கப்படுகிறது. இது பல காலங்கள் ஆராய்ச்சிக்காக செலவிட்டதன் பயனை திரும்பி அளிப்பதற்காக உருவாக்கப்பட்டது. இதனால் பல புதிய கண்டுபிடிப்புகள் உருவாவதற்கு காப்புரிமை வழிவகுத்தது.

ரைட் சகோதரர்கள் விமானத்தை கண்டுபிடித்ததற்காகவும் க்ராஹாம் பெல் தொலைபேசியைக் கண்டுபிடித்ததற்காகவும் முதலில் காப்புரிமையை பயன்படுத்த ஆரம்பித்தார்கள். அவர்கள் கண்டுபிடிப்புகள் உண்மையிலே சமூகத்திற்கு தேவையான ஒன்று என்பதால் அதற்கு காப்புரிமை கிடைக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

ஆனால் தற்போதைய குறுகிய நோக்கமுடைய கார்பரேட் சூழலில் காப்புரிமை என்பது மிரட்டுவதற்கும் பயமுறுத்துவதற்கும் தேவைப்படும் ஆயுதமாக மாறியுள்ளது.

இன்றைய சூழலில் மொபைல், மருந்து மற்றும் பொறியியல் உற்பத்தி நிறுவனங்களே அதிக அளவு பயன்படுத்தி வருகின்றன. அதில் தற்போது மொபைல் நிறுவனங்களால் நடத்தப்படும் காப்புரிமை போர் என்பது பெண்களின் குழாயடி சண்டை, ஆண்களின் வாய்க்கால் சண்டையை விட கேவலமாக உள்ளது.

கடந்த வருடத்தில் ஆப்பிள் நிறுவனம் தமது காப்புரிமைகளைப் பயன்படுத்தியதாக சாம்சங் நிறுவனத்திடம் 5000 கோடி அளவு நஷ்ட ஈடாக வாங்கியது. மொபைல் செவ்வக வடிவத்தில் இருப்பது பொதுவான ஒன்று, ஆனால் அதற்கு கூட ஆப்பிள் பணம் கேட்கிறது என்று சாம்சங் புலம்பியது. அதற்கு பரிகாரமாக சாம்சங் 5000 கோடி ரூபாயையும் சில்லறையாக கொடுத்து பழிவாங்கியது.

இந்த வருடம் சாம்சங் நிறுவனம் மீண்டும் மைக்ரோசாப்ட் நிறுவனத்திடம் மாட்டிக் கொண்டுள்ளார்கள். மைக்ரோசாப்டின் 300 காப்புரிமைகளுக்கு பணம் கொடுக்கவில்லை என்று சாம்சங் நிறுவனத்திடம் பில்லியன் டாலர் அளவு ராயல்டியும் அதற்கு வட்டியும் கேட்கிறது.

சாம்சங் நிறுவனத்தின் மொபைல்கள் உச்சகட்டத்தில் இருந்த போது ஒவ்வொரு கேலேச்ஸி மொபைலுக்கும் 1000 ரூபாய் வரை ராயல்டி கொடுத்து வந்தது. சீனாவில் இருந்து குறைந்த விலை மொபைல்கள் வந்த பிறகு சாம்சங் நிறுவனத்தின் விற்பனை டல்லடிக்க ராயல்டியை கட்டுப்படியாகாது என்று நிறுத்தி விட்டார்கள்… அதனால் மைக்ரோசாப்ட் கோர்ட்டுக்கு சென்று ஆறாயிரம் கோடியை வட்டியோடு கொடுங்கள் என்று கேட்கிறார்கள்.

மைக்ரோசாப்ட்டை பொறுத்த வரை இந்த சூழ்நிலையில் காசு என்பது முக்கியம் அல்ல. தங்களது போட்டியாளாரான கூகிள் நிறுவனத்தின் ஆண்ட்ராயிடு போன்களுக்கு செக் வைக்க வேண்டும் என்பது தான் குறிக்கோளாக உள்ளது.. அதற்கு மொபைல் லீடரான சாம்சங் நிறுவனத்த்தின் மூலம் காரியத்தை சாதிக்க முற்படுகிறார்கள்.

தற்பொழுது கோர்ட்டுக்கு வெளியே சமாதான படலம் ஆரம்பித்துள்ளது. தங்களது விண்டோஸ் போனை சாம்சங் நிறுவனம் தயாரிக்க வேண்டுமாம் என்பது தான் இதன் முக்கிய சாராம்சம். கூடிய விரைவில் இதற்கு அறிவிப்பு வந்தாலும் வரும்.

ஆனால் விண்டோஸ் மொபைல் ஒன்றும் சந்தையில் புதியதல்ல. இதற்கு முன்னரே வெளிவந்து மிக மெதுவான செயல் திறன் காரணமாக பெட்டிக்குள் முடங்கி போனது. அதனை மீண்டும் புதுப்பிக்க போகிறார்கள்.

ஆனால் மொபைல் வெற்றி பெறுவது என்பது வாங்குவோர் கையில் தான் உள்ளது. ஆனால் அதற்கு பலியாடாக சாம்சங் மாற உள்ளது.

சாம்சங் மட்டுமல்லாமல் சோனி, HTC என்று பல நிறுவனங்கள் காப்புரிமை போரில் கடந்த மூன்று வருடமாக கணிசமாக பணத்தை இழந்துள்ளன.

கண்டுபிடிப்புகள் மிரட்ட வைக்கவே பயன்படுகின்றன. முழுமையான வியாபர நோக்கம் சமூகத்திற்கு பயன் தராது. 200 ரூபாய் புற்று நோய் மருந்து ராயல்டியால் 6000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது என்றால் அறிவியலின் நோக்கம் திசை மாறுகிறது என்பதே உண்மை.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*