
யாழ்.நெடுந்தீவு பகுதியில் வைத்து கஞ்சா கடத்த முற்பட்ட குற்றச்சாட்டுக்காக இரண்டு இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் இருந்து படகு மூலம் கஞ்சா கடத்த முற்பட்டமையினாலேயே குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடம் இருந்து 53 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இரு இந்தியர்களையும் , கஞ்சா தொகையையும் காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் காங்கேசன்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.