எனக்கு இப்படி நடக்குமா?

பிறப்பு : - இறப்பு :

koli

இந்திய அணியின் ஒரு நாள் மற்றும் டி 20 போட்டிகளுக்கான தலைவர் பதவியில் இருந்து டோனி கடந்த 4 ஆம் திகதி பதவி விலகினார். அவர் பதவி விலகியதைத் தொடர்ந்து டெஸ்ட் அணியின் தலைவரான கோஹ்லியே ஒரு நாள் மற்றும் டி 20 போட்டிகளுக்கு தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.

தற்போது மூன்று விதமான போட்டிகளுக்கும் தலைவராக உள்ள கோஹ்லி இது குறித்து கூறுகையில், மூன்று விதமான போட்டிகளுக்கு இந்திய அணியின் தலைவராக தான் நியமிக்கப்படுவேன் என்று என் வாழ்க்கையில் தான் ஒருபோதும் நினைத்ததில்லை என கூறியுள்ளார்.

இந்திய அணியில் நான் நுழைந்தபோது, சிறப்பாக ஆடி ஓட்டங்கள் குவிக்க வேண்டும், நிறைய வாய்ப்புகளை பெற வேண்டும், அணியில் நிரந்தர இடத்தைப் பிடிக்க வேண்டும் மற்றும் அணியின் வெற்றியில் முக்கியப் பங்கு வகிக்க வேண்டும் என்பதில் தான் குறிக்கோளாக இருந்தேன் என கூறியுள்ளார்.

ஆனால் நான் தற்போது மூன்று விதமான போட்டிகளுக்கும் தலைவனாக இருக்கிறேன். இது எல்லாமே கடவுள் கொடுத்ததுதான். உங்கள் வாழ்கையில் என்ன நடந்தாலும், அது ஏதேனும் ஒரு காரணத்துக்காகவே நடக்கும். அதுவும் சரியான நேரத்தில்தான் நடக்கும் என்றார். அதேநேரத்தில், எதிர்ப்புகள், பாராட்டுகள் என பலவகையான விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை வரும் எனவும் கூறியுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit