ஜெ.வின் மரணம் குறித்து அவதூறு – சைபர் கிரைம் விசாரிக்க உத்தரவு.

பிறப்பு : - இறப்பு :

jeya

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து தாம் பல உண்மைகளை வெளியிட உள்ளதாகவும் தனது பெயர், முகவரியுடன் வாட்ஸ்அப்களில் உலாவரும் செய்தியால் தாம் அதிகம் பாதிக்கப்பட்டதாகக் கூறி சென்னை அப்போலோ மருத்துவர், போலீஸ் கமிஷனரிடம் புகாரளித்துள்ளார். வாட்ஸ்அப்பில் இந்த அவதூறு தகவலை பரப்பியவர்களை கண்டுபிடிக்க கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த செப்டம்பர் 22ம் தேதியன்று ஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப்பட்டு அப்போலோ மருத்துவமனையில் அனும்திக்கப்பட்டார். ஆரம்பத்தில் சற்று உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர் மருத்துவர்களின் சிறப்பான சிகிச்சையால் உடல் நலம் தேறி வந்தார். இந்நிலையில் டிஸ்சார்ஜ் செய்யப்படவிருந்த ஜெயலலிதா, திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் டிசம்பர் 5ம் தேதியன்று சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தார்.

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறது. அவர் செப்டம்பர் 22ம் தேதியே மரணமடைந்துவிட்டார். இதை சொல்லக்கூடாது என்று எங்களை நிர்வாகமும், சசிகலா ஆட்களும் மிரட்டினார்கள் என்று அப்போலோவில் கன்சல்டிங் டாக்டராக இருக்கும் டாக்டர் வி.ராமசுப்ரமணியன் என்பவர் அனுப்பியதுபோல் ஒரு வாட்ஸ்அப் தகவலை சில விஷமிகள் தயார் செய்து அதனை பரப்பவிட்டுள்ளனர்.

அந்த வாட்ஸ்அப் தகவலில் டாக்டர் ராமசுப்ரமணியன் கூறுவதுபோல், அவரது பெயர், முகவரி, செல்போன் நம்பர், தி.நகரில் உள்ள கிளினிக் அட்ரஸ், அவரது கிளினிக் தொலைபேசி எண், அவரது இமெயில் ஐடி., உள்ளிட்ட மொத்த விவரங்களும் அடங்கியிருந்தன.

கடந்த செப்டம்பர் 22ம் தேதியே மரணமடைந்த விபரத்தை ஊடகங்கள் என்னிடம் பேட்டி எடுத்து வெளியிட மறுக்கின்றன என்ற தகவலை பார்த்து செய்தியாளர்கள் அவரது செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டனர். அவரது நண்பர்களும் நலம் விரும்பிகளும் டாக்டரிடம் என்ன இப்படி ஒரு தகவலை அனுப்பி இருக்கீங்க என்று கேட்டவுடன் டாக்டர் ராமசுப்ரமணியம் அந்த மெசேஜை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

தனக்கு ஆகாதவர்கள் யாரோ இது போன்ற வேலையை செய்துள்ளனர் என்று டாக்டர் நண்பர்கள் மற்றும் போன் செய்து கேட்பவர்களிடம் கூறியுள்ளார். பின்னர் தனது போனையே சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டார்.

இந்நிலையில், நேற்று கமிஷனர் அலுவலகத்துக்கு வந்த டாக்டர் ராமசுப்ரமணியன், சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜை நேரில் சந்தித்து புகாரளித்தார். அதில் தனக்கு ஆகாதவர்கள் யாரோ விஷமத்தனமாக மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக நான் மெசேஜ் அனுப்பியதாக வாட்ஸ்அப் வலைதளங்களில் பரவ விட்டுள்ளனர்.

இது திட்டமிட்ட அவதூறு. இதன் பின்னணியில் உள்ள விஷயங்கள் மற்றும் தகவலை தயார் செய்து அனுப்பியவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுகொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

இந்த புகாரை பெற்ற கமிஷனர் ஜார்ஜ், சைபர் கிரைமின் தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit