முடிகளில் வெடிப்பா? கவலை வேண்டாம்…இதை போடுங்க அப்புறம் பாருங்க..!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

தற்போது சூரியக்கதிர்களின் தாக்கம் மிகவும் மோசமாக இருப்பதால், தலைமுடியில் உள்ள எண்ணெய் பசை முழுமையான உறிஞ்சப்பட்டுவிடுகிறது.

எனவே தலைமுடியின் ஆரோக்கியத்தை அதிகரிக்கவும், தலைமுடிக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்கவும், நல்ல சத்துக்கள் நிறைந்த இயற்கை பொருட்களைக் கொண்டு, வாரம் ஒரு முறை தவறாமல் ஹேர் மாஸ்க் போட வேண்டியது அவசியம்.

முடியின் முனைகளில் வெடிப்புக்கள் ஏற்படாமல் இருக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள ஹேர் மாஸ்க்கைப் போட்டு வந்தால், முடியின் முனைகள் வெடிப்பது தடுக்கப்படும்.

தேவையான பொருட்கள்- விளக்கெண்ணெய் – 2 டீஸ்பூன், முட்டை – 1, எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன், கிளிசரின் – 1 டீஸ்பூன்

செய்முறை – 1

முதலில் ஒரு பௌலில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.

செய்முறை – 2

பின் அத்துடன் இதர பொருட்களையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

செய்முறை – 3

பின்பு தயாரித்து வைத்துள்ள ஹேர் மாஸ்க்கை ஸ்கால்ப் மற்றும் முடியின் முனை வரை நன்கு தடவ வேண்டும்.

செய்முறை – 4

பிறகு ஷவர் கேப்பை தலையில் சுற்றி, 1/2 மணிநேரம் ஊற வைத்து, இறுதியில் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.

குறிப்பு

இந்த ஹேர் மாஸ்க்கை வாரத்திற்கு 1-2 முறை தலைக்கு பயன்படுத்த வேண்டும். இந்த மாஸ்க்கை முடி வெடிப்பு முற்றிலும் போகும் வரை பின்பற்ற வேண்டும்.

– See more at: http://www.manithan.com/news/20170111124195#sthash.jxBEpGSY.dpuf

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*