இந்திய வரலாற்றில் முதன் முறையாக 48 மணிநேரத்தில் வழங்கப்பட்ட தண்டனை.

பிறப்பு : - இறப்பு :

JUdgemant

இந்திய நீதித்துறை வரலாற்றில் முதன் முறையாக குற்றம்சாட்டப்பட்ட குற்றவாளிக்கு 48 மணிநேரத்தில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு, முன்பின் அறிமுகமில்லாத நபர் ஒருவர் பாலியல் தொடர்பான குறுஞ்செய்திகளை அனுப்பியுள்ளார்.

இதுகுறித்து அப்பெண், சக்கன் பகுதி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் அதே பகுதியைச் சேர்ந்த அதுல் கணேஷ் படீல் என்பவரை பொலிசார் 8ம் திகதி கைது செய்து கெட் குற்றவியல் முதன்மை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இவர் அங்குள்ள நிறுவனம் ஒன்றில் பாதுகாவலராக பணிபுரிந்து வருகிறார்.

படீலின் குற்றம் நிரூபணமானதால், 2 ஆண்டுகள் தண்டனை விதித்து கெட் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்திய நீதித்துறை வரலாற்றில் மிகவிரைவாக வழங்கப்பட்ட தீர்ப்பாக இது பார்க்கப்படுகிறது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit