கிளிநொச்சியில் போா்க்கால அடிப்படையில் டெங்குநோய் கட்டுப்படுத்தும் செயற்பாடுகள்

பிறப்பு : - இறப்பு :

war-time-isuuses

கிளிநொச்சியில் போா்க்கால அடிப்படையில் டெங்குநோய் கட்டுப்படுத்தும் செயற்பாடுகள் முப்படையினாின் உதவியுடன் மேற்கொள்ளப்படுகிறது

கிளிநொச்சி மாவட்டத்தில் டெங்கு நோய் தீவிரமடையும் நிலையில் உள்ளமை அவதானிக்கப்பட்டு அதனை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முப்படையினரின் உதவியுடன், சுகாதார துறையினா் ஆகியோா் இணைந்து இந்தப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா்.

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் வருடத்தின் 10.01.2017 வரையான காலப்பகுதியில் 14 நோயாளர்கள் டெங்குக் காய்ச்சல் காரணமாக சிகிச்சைபெற்றுள்ளனர்.

இதனையடுத்து டெங்கு நுளம்பு பெருகும் இடங்கள் சுத்திகரிக்கப்படுவதோடு, போா்கால அடிப்படையில் விழிப்புனா்வு மற்றும் சுத்திகரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது அந்தவகையில்

நேற்றைய தினம் (10.01.2017) கிளிநொச்சி ஆனந்தபுரம் கிராம அலுவலர் 637 வீடுகளில், 236 வீடுகளில் நடத்தப்பட்ட தேடுதலின்போது 93 இடங்களில் அபாயகரமான டெங்கு நுளம்பு வளரும் இடங்கள் கண்டறியப்பட்டு அவற்றில் 83 இடங்கள் உடனடியாக சுத்திகரிக்கப்பட்டன.

மாவட்டப் பொது வைத்தியசாலை கிளிநொச்சியில் இடம்பெற்ற பரிசோதனையின்போது 15 அபாயகரமான இடங்கள் அவதானிக்கப்பட்டு சுத்திகரிக்கப்பட்டன.

பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான கிளிநொச்சி பொதுச்சந்தை, கிளிநொச்சி புகையிரத நிலையம் ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில், 12 அபாயகரமான இடங்கள் கண்டறியப்பட்டு சுத்திகரிக்கப்பட்டன.

பளை பூனகரி மற்றும் கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரி பிரவுகளில். ஓவ்வொரு பிரிவிலும் உள்ள 5 பாடசாலைகளில் நேற்றையதினம் டெங்கு விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது.
கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள 15 அரச அலுவலகங்களில் நேற்றையதினம் 10-01-2017 இடம்பெற்ற பரிசோதனையின்போது 06 அபாயகரமான இடங்கள் அவதானிக்கப்பட்டு சுத்திகரிக்கப்பட்டன.
பூநகரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள 4 அரச அலுவலகங்களில் நேற்றையதினம் 10-01-2017 இடம்பெற்ற பரிசோதனையின்போது 02 அபாயகரமான இடங்கள் அவதானிக்கப்பட்டு சுத்திகரிக்கப்பட்டன.

.
இன்றைய தினம் (11.01.2017) கிளிநொச்சி நீதிமன்று, கிளிநொச்சி அரச அதிபர் அலுவலகம், கரைச்சி பிரதேச செயலகம், கிளிநொச்சி பிரதம தபாலகம், கிளிநொச்சி பொது நூலகம், கிளிநொச்சி பழைய கச்சேரி, கிளிநொச்சி நீர்ப்பாசனத் திணைக்களம் ஆகிய இடங்களில் டெங்கு நுளம்புகள் உற்பத்தியாகும் இடங்களைத் தேடி அழிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன

அதேவேளை கிராமங்களில் வீடுவீடாகச் சென்று விழிப்புணர்வுப் பரப்புரை மற்றும் தேடியழிக்கும் நடவடிக்கைள் மாவட்டம் முழுவதும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டவுள்ளன என சுாதார துறையினா் தெரிவித்துள்ளனா்

மாவட்டத்தில் உள்ள பொது அமைப்புகள் இந்த முயற்சியில் தங்களது பூரண ஒத்துழைப்பினை வழங்கி உதவுமாறும் சுகாதார பிாிவினா் கோரிக்கை விடுத்துள்ளனா்

இந்த முயற்சியில் கிளிநொச்சி மாவட்ட சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தினர், பாதுகாப்புப் படையினர் மற்றும் காவல்துறையினரும் சுகாதார பிாிவினரும் பிரதானமான பங்களிப்பினை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit