போகன் படம் அந்த படத்தின் கதையா?

பிறப்பு : - இறப்பு :

bogan

ஜெயம் ரவி, ஹன்சிகா, அரவிந்த் சாமி ஆகியோர் இணைந்து நடித்துள்ள போகன் படம் விரைவில் வெளியாகவுள்ளது.

ஏற்கனவே பாடல்களும், டீசரும் நல்ல வரவேற்பை பெற்று அதிகமான பேர் இணையத்தில் அதை பார்த்த நிலையில் இப்போது தணிக்கை குழு படத்திற்கு U சான்றிதழ் வழங்கியுள்ளது.

மகிழ்ச்சியில் படக்குழுவினர் இருந்தாலும் இப்படம் வெளிவருமா என சந்தேகமான நிலை இருப்பதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே இப்படத்தின் கதை என்னுடையது என ஒருவர் சொந்தம் கொண்டாடிய பிரச்சனை முடிந்து போனது.

இதே ஜோடி நடித்த ரோமியோ ஜூலியட் படத்தின் இயக்குனர் லட்சுமணன் எடுத்துள்ளார். அப்படம் லைக் பாதர் லைக் சன் ஆங்கில படத்தின் கதை என சொல்லப்பட்டது.

தற்போது போகன் படம் மீன்குழம்பும் மண்பானையும் படத்தின் கதை தான் என சொல்லப்படுகிறது. மேலும் சென்சார் அனுமதி கிடைத்துவிட்டதால் படம் வெளியாகும் நேரத்தில் மீண்டும் பழைய பிரச்சனைகள் ஏதாவது வருமோ என படக்குழு அச்சத்தில் உள்ளதாம்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit