பலாத்காரம் செய்து கொலை… கொத்து கொத்தாக மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள்!

பிறப்பு : - இறப்பு :

kill-baby

2006 ஆம் ஆண்டு ஒட்டுமொத்த இந்தியாவையே உலுக்கிய நொய்டா தொடர்கொலை குறித்து திரைப்பட தயாரிப்பாளர் Devineni என்பவர் ‘house of horrors’ என்ற பெயரில் ஆவணப்படமாக எடுத்துள்ளார்.

டெல்லியை சேர்ந்த பிரபல தொழிலதிபரான Moninder Singh Pandher என்பவர் தனது, பங்களா வீட்டில் யாருக்கும் தெரியாமல் பல்வேறு குழந்தைகள் மற்றும் பெண்களை பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளார்.

நொய்டாவில் Nithari என்ற கிராமத்தில் அமைந்துள்ள குடிசைப்பகுதிகளில் வசித்து வந்த குழந்தைகள் தொடர்ச்சியாக காணாமல் போயுள்ளனர்.

பெண் மற்றும் ஆண் குழந்தைகள் தொடர்ச்சியாக காணாமல் போவதால் விழிபிதுங்கிய குடிசைவாசிகள் பொலிசிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

பெண் குழந்தைகளை தொடர்ந்து பெண்களும் காணாமல் போக ஆரம்பித்தால் பொலிசார் தேடுதல் வேட்டையை முடுக்கிவிட்டதில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகின.

Moninder Singh Pandher என்ற தொழிலதிபர், தனது வீட்டின் ரோட்டு ஓரத்தில் நடந்து செல்லும் குழந்தைகளிடம் சென்று, நான் நிறைய சொக்லேட் தருகிறேன், என்னுடன் வருகிறாயா என ஆசையாக கேட்பார். இதற்கு ஆசைப்பட்ட குழந்தைகள் அவருடன் பங்களாவுக்குள் சென்றதும், அவர்களை பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளார்.

அதன்பின்னர், அவர்களது உடல்களை தனது வீட்டின் ஓரத்தில் புதைத்து வைத்துள்ளார். இதே போன்று மதுவுக்கு அடிமையான மாதுக்களை தனது வீட்டிற்கு அழைத்துச்சென்று, அவர்கள் விரும்பும் மதுவதை கொடுத்து பலாத்காரம் செய்து கொலை செய்து புதைத்துள்ளார்.

மேலும் ஓரு குழந்தையின் உடலை சமைத்து சாப்பிட்டுள்ளார். இவர் புரிந்த குற்றசெயல்களுக்கு இவரது வீட்டு வேலைக்காரரும் உதவியாக இருந்துள்ளார்.

இதுபோன்று தொடர்ச்சியாக குழந்தைகள் காணாமல் போயுள்ளனர். அதுவும், கடைசியாக இவரது பங்களா வாசிலின் எதிர்புறத்திலேயே அக்குழந்தைகள் தென்பட்டதால் சந்தேகமடைந்த பொலிசார், இவரது வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தியதில், 15 குழந்தைகளின் எலும்புக்கூடுகள் கொத்து கொத்தாக கண்டெடுக்கப்பட்டுள்ளன.

மொத்தம் 19 குழந்தைகளை கொலை செய்துள்ளார். மேலும், பல பெண்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்படவில்லை.

2005 முதல் 2006 வரை இந்த பாதக செயலில் ஈடுபட்டு வந்த இவரை, 2006 கடந்த 2006 ஆம் ஆண்டு பொலிசார் கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணையில், 2015 ஆம் ஆண்டு ஜனவரி 28 ஆம் திகதி ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்நிலையில், இயக்குநர் Devineni, Nithari கிராமத்திற்கு சென்று குழந்தைகளை இழந்த பெற்றோரிடம் நடந்தவற்றை விவரங்களை அறிந்து ஆவணப்படமாக எடுத்துள்ளார்.

இந்த திரைப்படம் ‘house of horrors’ என்ற பெயரில் வெளியாகவிருக்கிறது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit