
ஐரோப்பிய நாடான செர்பியாவின் தலைநகர் பெல்கிரேடில் மத்திய கிழக்கு மற்றும் ஆசியாவிலிருந்து வந்து குடியேறிய அகதிகள் பலர் வாழ்ந்து வருகிறார்கள்.
அதே போல சிரியா, ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து வந்து பெல்கிரேடில் 7000க்கும் மேற்பட்ட மக்கள் வாழ்கிறார்கள்.
தற்போது இங்கு -20 க்கும் குறைவான வெப்பநிலை நிலவுவதால் எங்கு பார்த்தாலும் பனி கொட்டி கொண்டிருக்கிறது, இதனால் இங்கு வாழும் மக்கள் பெரும் துன்பத்துக்கு ஆளாகியுள்ளார்கள்.
இந்த கடும் பனியுடன் உணவு பஞ்சமும் சேர்ந்து கொண்டதால் நீண்ட வரிசையில் மக்கள் உணவுக்காக காத்திருக்கும் நிலை தற்போது ஏற்ப்பட்டுள்ளது.
அதிலும் இந்த குளிரிலிருந்து தப்பித்து ஒதுங்கும் தங்குமிடத்தை பொருத்தவரையில் பெண்களுக்கும், குழந்தைகளுக்குமே முன்னுரிமை தரப்படுகிறது.
ஆண்கள் தங்க இடமின்றி சிரமத்துக்கு ஆளாகின்றனர், தீ மூட்டி குளிர் காய்கின்றனர்.
இதுகுறித்து பாகிஸ்தான் அகதி Amin Jahn கூறுகையில், இந்த கடும் பனி மற்றும் குளிரால் எல்லோரும் இங்கு திணறுகிறோம்.
இன்று -20ல் இருக்கும் வானிலை நேற்று -16ல் இதை விட மோசமானதாக இருந்தது. இதனால் பலர் சுவாச கோளறுகள் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என கூறியுள்ளார்.
இரண்டாம் உலக போரின் போது மக்கள் இதே போல கடும் பனியில் உணவுக்காக வாடியது நினைவுக்கு வருவதாக பலர் தெரிவித்துள்ளார்கள்.