சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரான்ஸ்!

பிறப்பு : - இறப்பு :

france-flag

2016ஆம் ஆண்டில் யூரோ 2016 கால்பந்து போட்டிகளை பிரம்மாண்ட முறையில் பிரான்ஸ் நாடு தொகுத்து வழங்கியது.

ஏற்கனவே பொருளாதார பிரச்சனையில் சிக்கி தவிக்கும் பிரான்ஸ் இந்த போட்டிகளை நடத்த மக்களின் பணம் பல கோடிகளை வீணாக செலவழித்ததாக பரபரப்பு புகார்கள் கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில், இந்த புகார்கள் குறித்த விளக்கத்தை பிரான்ஸ் நாட்டின் விளையாட்டு துறை அமைச்சகம் தற்போது வெளியிட்டுள்ளது.

அதில், யூரோ 2016 கால்பந்து போட்டிகளுக்கு €200 மில்லியன் அளவு செலவானது உண்மை தான்.

ஆனால், போட்டிகள் நடந்த போது வந்த சுற்றுலா பயணிகள் மூலம், பல்வேறு சமூக அமைப்பு மற்றும் விளம்பரங்கள் மூலமும் நாட்டுக்கு €1.22 பில்லியன் அளவு மிக பெரிய வருவாய் கிடைத்துள்ளது.

தோராயமாக, ஒரு நாளைக்கு ஒரு சுற்றுலா பயணி €154 அளவு செலவு செய்துள்ளதாகவும் பிரான்ஸ் நாட்டு விளையாட்டு அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.

இந்த வருவாயானது மக்கள் நலத்திட்ட பணிகளுக்கு அரசு செலவிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit