யுவராஜ் கேட்ட கேள்வி.. கேப்டன் பதவி குறித்து முதன் முதலில் பதிலளித்த டோனி. -(VIdeo)

பிறப்பு : - இறப்பு :

doni-yuwa-raj

இந்திய அணியின் வெற்றித் தலைவனாக திகழ்ந்து வந்தவர் டோனி. இவர் சமீபத்தில் இந்திய அணியின் ஒரு நாள் மற்றும் டி 20 போட்டிகளுக்கான தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இது கிரிக்கெட் ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அவர் தலைவர் பதவியில் இருந்து விலகுவதற்கு பிசிசிஐ தான் காரணம் என்று செய்திகள் வெளிவந்தன. ஆனால் இதற்கு பிசிசிஐ மறுப்பு தெரிவித்துள்ளது.

Video Here

தலைவர் பதவியில் இருந்து விலகிய பின்பு, அது குறித்து டோனி இது வரை எந்த ஒரு கருத்தும் கூறாமல் இருந்தார். இந்நிலையில் நேற்று நடந்த பயிற்சி ஆட்டத்தின் போது யுவராஜ் சிங்கும், டோனியும் பட்டையை கிளப்பினர். ஆனால் இந்திய அணி தோல்வியை சந்தித்தது.

இதற்கிடையில் யுவராஜ் சிங், டோனியிடம் இந்திய அணியின் தலைவர் பதவி குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். அதை யுவராஜ்சிங் தனது இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்துள்ளார்.

அதற்கு அவர் பதில் அளிக்கையில், இந்திய அணிக்கு தலைவராக இருந்தது சிறப்பு வாய்ந்தது. மிகவும் எளிதாக இருந்தது. கடந்த 10 வருடங்கள் மிகவும் அனுபவித்து விளையாடியதாக கூறியுள்ளார்.

மேலும் யுவராஜ்சிங் அடித்த அந்த 6 சிக்ஸர்கள் தான் மிகச் சிறந்த ஒன்றாக பார்ப்பதாக கூறினார். மேலும் தற்போது தலைவர் பதவியை துறந்துள்ளதால் டோனி சிக்ஸர்கள் எல்லாம் அடிப்பாரா, அப்படிப்பட்ட டோனியை பார்க்க முடியுமா என்று யுவராஜ்சிங் கேள்வி எழுப்பினார்.

அதற்கு அப்போதைய கட்டத்தில் ஆட்டம் எப்படி செல்கிறதோ அதை வைத்து தான் கட்டாயமாக சிக்ஸர் அடிப்பேன் என்று கூறியுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit