இரவு 9 மணியா? அதற்கு மேல் இந்த உணவுகளை சாப்பிட்டால் ஆபத்து!

பிறப்பு : - இறப்பு :

food-cant

நாம் அன்றாடம் சாப்பிடும் ஆரோக்கியமான சில உணவுகள் கூட நேரம் கடந்து அல்லது அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் ஆபத்தை தான் ஏற்படுத்தும்.

அந்த வகையில், இரவு ஒன்பது மணிக்குப் பின், ஆரோக்கியமான சில உணவுகளை சாப்பிட்டால் கூட அது நமக்கு தீங்குகளைத் தான் தரும்.

பால்

பாலில் எவ்வளவு தான் புரோட்டீன், கால்சியம் சத்துக்கள் அதிகமாக இருந்தாலும், அதை இரவில் படுக்கும் முன் குடித்தால், அதில் உள்ள லாக்டோஸ் செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தி, நிம்மதியான தூக்கத்தை கெடுக்கிறது.

பாஸ்தா

பாஸ்தாவில் கார்போஹைட்ரேட் அதிகம் இருப்பதால், இரவில் நன்றாக தூங்க முடியாது. எனவே இதனை இரவில் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

சாக்லேட்

பலருக்கு விரும்பும் சாக்லேட்டில், சர்க்கரை மற்றும் கொழுப்பு அதிகம் இருக்கிறது. எனவே இதனை இரவில் சாப்பிட்டால், நல்ல தூக்கத்தைப் பெற முடியாமல், நமது உடலில் கார்டிசோல் அளவு அதிகரித்து, திசுக்கள் உடைத்து, பெரிய பிரச்சனையை ஏற்படுத்துகிறது.

பீட்சா

பீட்சாவில் கார்போஹைட்ரேட், கொழுப்புக்கள், சோடியம் போன்றவை அதிக அளவில் இருப்பதால், அவற்றை இரவு 9 மணிக்கு மேல் சாப்பிடாது. ஏனெனில் இது உடல் பருமனை அதிகரிக்கச் செய்கிறது.

பச்சை மிளகாய்

பச்சை மிளகாய் சாப்பிட்டால் உடலின் மெட்டபாலிசம் அதிகரிக்கும். ஆனால் அதனை பகல் நேரத்தில் சாப்பிட்டால் நல்லது. அதுவே இரவில் பச்சை மிளகாய் சேர்த்து சமைத்த உணவை சாப்பிட்டால், தூக்கமின்மை மற்றும் சோர்வுத் தன்மை பிரச்சனையை ஏற்படுத்துகிறது.

இறைச்சிகள்

பொதுவாக புரோட்டீன் உள்ள உணவுகள் செரிமானம் அடைவதற்கு, அதிக அளவு எனர்ஜி தேவைப்படுகிறது. ஆனால் இரவில் அவ்வளவு ஆற்றல் நம்மிடம் இருப்பதில்லை எனவே புரோட்டீன்கள் அதிகம் உள்ள இறைச்சியை இரவில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

வெள்ளை சாதம்

வெள்ளை சாதத்தை இரவு நேரத்தில் சாப்பிடக் கூடாது. ஏனெனில் இது இரவில் நமது நிம்மதியான தூக்கத்தை பறித்து விடுகிறது. இதனால் இரவு 9 மணிக்கு மேல் சாதத்தை தொடவேக் கூடாது.

பழச்சாறு

அசிடிக் ஆசிட் மற்றும் சர்க்கரை அதிகம் உள்ள பழச்சாறுகளை இரவு நேரத்தில் குடிக்கக் கூடாது. ஏனெனில் இது நமக்கு நெஞ்செரிச்சலை ஏற்படுத்தி, இரவில் தூங்கமின்மை பிரச்சனைகளையும் உண்டாக்குகிறது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit