
நமது முகத்தில் உள்ள நரம்புகள், உணர்ச்சிகளை வெளிப்படுத்தும், முகத்தசைகளை இயக்கக் கூடிய பணியைச் செய்கிறது.
அந்த நரம்புகளில் உள்ள கபால நரம்பு மட்டும் மூளையின் தண்டுப் பகுதியில் இருந்து,காதின் உட்புறம் சிறு குழாயின் வழியாக கபாலத்தை வந்து சேருகின்றது.
பின் இந்த நரம்பு நம் முகத்தின் தசையில் ஐந்து கிளைகளாக பிரிந்து தசைகளை இயக்குகிறது.
மேலும் இந்த நரம்பின் செயல்பாடு குறைந்தால், முகத்தில் உள்ள அனைத்து தசைகளின் இயக்கமும் பாதிப்படைகிறது.
முகவாத நோய்(Facial Nerve) ஏற்படுவதற்கான காரணங்கள்
- நமது இரவு பயணத்தின் போது, சில்லென்ற குளிர்ந்த காற்று வீசும் போது, நமது முகம் மற்றும் காதுகளை மூடாமல் இருப்பது மற்றும் இரவில் திறந்த வெளியில் உறங்குவது இது போன்ற காரணங்களினால் முகவாத நோய் ஏற்படுகிறது.
- நமது சிறுவயதில் Herpes Zoster என்ற வைரஸ் தாக்கத்தினால், சிற்றம்மை ஏற்பட்டிருந்தால், அந்த வைரஸ்களின் தேக்கத்தின் மூலம் நமக்கு முகவாத நோயின் தாக்கம் ஏற்படுகிறது.
முகவாத நோயின் அறிகுறிகள்
- காதுகளின் முன் அல்லது பின்புறத்தில் வலிகள் தோன்றும்.
- முகவாத நோய் எந்த பக்கத்தில் பாதித்து உள்ளதோ, அந்த பக்கம் மட்டும் வாய் கோணி இருக்கும்.
- முகத்தின் ஒரு பக்கம் மட்டும் உணர்ச்சிகள் அற்றதாக இருக்கும்.
- உணவு சாப்பிடும் போது, அந்த உணவுகள் பற்கள் மற்றும் கன்னத்திற்கு இடையிலேயே தங்கி இருக்கும்.
- நாக்கில் சுவைகள் எதுவும் தெரியாது, தலைவலி மற்றும் தலைச் சுற்றல் அதிகமாக இருக்கும்.
- காதின் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில், வலியுடன் கூடிய கொப்புளங்கள் ஏற்படும்.
- கண்களின் கருவிழி ஈரத்தன்மை இல்லாமல் இருக்கும் இதனால் கண்ணில் எரிச்சல் ஏற்படும். மேலும் தூங்கும் போது, கண்கள் பாதி திறந்த நிலையில் இருக்கும்.