நாள்முழுவதும் கணிப்பொறி பார்ப்பீர்களா? உங்கள் கண்கள் பாதுகாப்பாக உள்ளதா?

பிறப்பு : - இறப்பு :

நாள் முழுவதும் கணிப்பொறியில் வேலை பார்ப்பவர்களுக்கு கண் பார்வை 60 வயதிற்கு பிறகு மிகவும் மோசமாக போய்விடும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். நாள் முழுவதும் கணிப்பொறியில் அமர்பவர்கள் நன்றாக தூங்க வேண்டும். மேலும் தகுந்த முறையில் கண்களை பாதுகாக்க வேண்டும்.

கண்களுக்கு மசாஜ் அளியுங்கள்: கண்களுக்கு காலை மாலை அல்லது எப்போதெல்லாம் கண்களில் வலி ஏற்படுகிறதோ அப்போது மசாஜ் செய்ய வேண்டும். மென்மையாக கண்களைச் சுற்றி இதமாக அமுத்தினால் ரத்த ஓட்டம் பாய்ந்து நரம்புகளுக்கு புத்துணர்ச்சி தரும். மேலும் கண்ணீர் சுரப்பியை தூண்டுவதால் கண்கள் ஈரப்பதத்தை தக்க வைக்கும்.

கண்களுக்கான உடற்பயிற்சி: கண்களை மேலும் கீழும் அசைப்பது, இறுக்க மூடி சில நொடிகளில் அகல கண் திறப்பது, கண்களை வட்ட வடிவமாக சுழற்றுவது ஆகியவற்றை தினமும் செய்து வந்தால் கண்களின் நரம்புகள் பலப்படும். புத்துணர்வு தரும். இளமையாகவும் கண்களை வைத்திருக்கலாம்.

உள்ளங்கை: இரு உள்ளங்கைகளையும் நன்றாக தேய்த்து உடனே உள்ளங்கையால் கண்களை போத்துங்கள். இது கண்களுக்கு புத்துணர்வு தர சிறந்த வழியாகும். இதனால் கண்களில் ஏற்படும் சோர்வு உடனடியாக நீங்கும்.

நீரால் அடியுங்கள்: இது ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தும் அருமையான வழி. குளிர்ந்த நீரினால் கண்களில் வேகமாக அடித்துக் கொள்ளுங்கள். முகம் முழுவதும் அப்படி நீரினால் அடித்தாக் தசைகள் வேகமாக இயங்கும். இதனால் கண்களைச் சுற்றிலும் , பலமிழந்த நரம்புகள் பலப்படும்.

சீமை சாமந்தி தேநீர்: சீமை சாமந்தி டீ பேக்கை ஒன்று எடுத்து வெதுவெதுப்பான நீரில் 1 நிமிடம் வைத்திருங்கள். பின்னர் அதை எடுத்து ஃப்ரிட்ஜில் சில நிமிடங்கள் வைத்து குளிர்ந்த பின் கண்களில் ஒத்தடம் வைக்கவும். இதனால் கண்களுக்கு புத்துணர்ச்சி தரும். கண்களும் பளிசென்று தெரியும்.

வெள்ளரிக்காய்: இது பழைய வழிதான் என்றாலும், என்றும் தெ பெஸ்ட் என்று சொல்லக் கூடியது. வெள்ளரிக்காயை வட்டமாக வெட்டி சில நிமிடங்கள் ஃபிரிட்ஜில் வைத்து அதனை கண்களுக்கு வைத்துக் கொள்ளுங்கள். கண்களுக்கு பல நன்மைகளை தரக் கூடியது.

ரோஸ் வாட்டர்: ரோஸ் வாட்டரை சிரிது பஞ்சினால் நனைத்து கண்களில் ஒத்திக் கொள்ளுங்கள். இது கண் நரம்புகளைத் தூண்டும். கண்களிலிருக்கும் சோர்வு களைந்துவிடும்.

விளக்கெண்ணெய்: கம்ப்யூட்டர், மொபைல் பார்ப்பதால் கண் நரம்புகள் அதிக சூடாகியிருக்கும். இதனால் எளிதில் கண்கள் பாதிப்படையும். எனவே வெதுவெதுப்பான விளக்கெண்ணெயால் கண்களைச் சுற்றி இதமாக மசாஜ் செய்து இரவு தூங்கினால் கண்களுக்குள் உண்டாகும் அத்தனை சூட்டையும் , விளக்கெண்ணெய் தணித்துவிடும். மறு நாள் கண்கள் பளபளக்கும்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit