
காலம் கடந்து போவதைப் பார்த்துக் கொண்டே இருக்க முடியாத ஒருசில நல்ல உள்ளங்கள் நேசக்கரம் நீட்டும்போது அவர்களின் கரம்பற்றி, அவர்களின் பாதையைச் செப்பனிட்டு, வழிகாட்டி, அழைத்துச் செல்ல வேண்டியது ஊடகங்களின் தார்மீகக் கடமை என்ற அடிப்படையில் கதிரவன் குழுமம் இந்தக் காணொளியை தங்கள் பார்வைக்குச் சமர்ப்பிக்கின்றது. இதன் விளைவாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வில் சிறுதுளி முன்னேற்றமாவது உருவாகுமானால் நல் இதயம் படைத்த மனிதர்கள் என்ற அடிப்படையில் நாமும் மகிழ்வோம்.