வரலாற்று பார்வையில் இன்று! – நியூயோர்க் நகரில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 17 பேர் கொல்லப்பட்டனர்.

பிறப்பு : - இறப்பு :

histry

ஜனவரி 8 (January 8) கிரிகோரியன் ஆண்டின் எட்டாம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 357 (நெட்டாண்டுகளில் 358) நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1297 – மொனாக்கோ விடுதலை பெற்றது.

1782 – திருகோணமலை கோட்டையை பிரித்தானியர் கைப்பற்றினர்.

1806 – கேப் கொலனி பிரித்தானியாவின் குடியேற்ற நாடாகியது.

1815 – அண்ட்ரூ ஜாக்சன் தலைமையில் ஐக்கிய அமெரிக்கப் படைகள் லூசியானாவின் நியூ ஓர்லீன்சில் பிரித்தானியரைத் தோற்கடித்தனர்.

1838 – ராபர்ட் கால்டுவெல் மதப் பணியாற்ற அயர்லாந்தில் இருந்து சென்னை வந்தார்.

1838 – அல்பிரட் வெயில் புள்ளிகளையும் கோடுகளையும் கொண்ட தொலைத்தந்தியை அறிமுகப்படுத்தினார்.

1867 – வாஷிங்டன், டிசியில் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் முதன்முறையாக வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.

1889 – ஹெர்மன் ஹொல்லெரிக் மின்னாற்றலில் இயங்கும் பட்டியலிடும் கருவிக்கான (tabulating machine) காப்புரிமம் பெற்றார்.

1900 – அலாஸ்கா இராணுவ ஆட்சியில் வந்தது.

1902 – நியூயோர்க் நகரில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 17 பேர் கொல்லப்பட்டனர்.

1906 – நியூ யோர்க்கில் ஹட்சன் ஆற்றில் களிமண் கிண்ட்டும் போது இடம்பெற்ற நிலச்சரிவில் 20 பேர் கொல்லப்பட்டனர்.

1908 – நியூ யோர்க் நகரில் பார்க் அவெனியூ சுரங்கத்தில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 17 பேர் கொல்லப்பட்டனர்.

1912 – ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் அமைக்கப்பட்டது.

1916 – முதலாம் உலகப் போர் (கலிப்பொலி நடவடிக்கை) கூட்டுப் படைகள் துருக்கியின் கலிப்பொலியில் இருந்து வெளியேறின.

1926 – அப்துல்-அசீஸ் இபன் சாவுட் ஹெஜாஸ் நாட்டின் மன்னராக முடிசூடி அதன் பெயரை சவுதி அரேபியா என மாற்றினார்.

1940 – இரண்டாம் உலகப் போர், பிரித்தானியா உணவுப் பங்கீட்டை அறிமுகப்படுத்தியது.

1946 – கோவை சின்னியம்பாளையம் பஞ்சாலை தொழிலாளர் சங்க நிர்வாகிகள் நான்கு பேர் தூக்கிட்டு கொல்லப்பட்டனர்.

1956 – எக்குவடோரில் ஐந்து அமெரிக்க மதபோதகர்கள் பழங்குடியினரால் கொல்லப்பட்டனர்.

1959 – பிடெல் காஸ்ட்ரோவின் கியூபப் புரட்சி முடிவுக்கு வந்தது.

1962 – நெதர்லாந்தில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 93 பேர் கொல்லப்பட்டனர்.

1973 – சோவியத் விண்கப்பல் லூனா 21 விண்ணுக்கு ஏவப்பட்டது.

1994 – ரஷ்யாவின் விண்வெளி வீரர் வலேரி பல்யாக்கொவ் மீர் விண்வெளி நிலையத்துக்கு சோயூஸ் விண்கப்பலில் பயணமானார். இவர் மொத்தம் 437 நாட்கள் விண்ணில் தங்கியிருந்தார்.

1995 – தமிழீழ விடுதலைப் புலிகள் – சந்திரிகா அரசு போர் நிறுத்தம் ஆரம்பமாகியது.

1996 – சயீரில் அண்டோனொவ் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 350 பேர் கொல்லப்பட்டனர்.

2008 – கொழும்பு புறநகர்ப் பகுதியான ஜா-எலையில் இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலில் நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான டி.எம்.தசநாயக்க உட்பட மூவர் கொல்லப்பட்டனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit