ஒக்டோபரில் பூமி அழியுமா? நம்ப முடியாத ஆதாரங்களை வெளியிட்டுள்ள புதிய புத்தகம்.

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

மிகப்பெரிய மர்மமான கிரகம் ஒன்று, நம் கிரகத்தோடு மோதி தகர்க்கப்போவதால், இந்த ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் நம் உலகம் அழியப்போகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் புதுவித தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

‘பிளானட் எக்ஸ் – தி 2017 அரைவல்’ என்ற புத்தகத்தின் ஆசிரியரான டேவிட் மேட், பூமியை விட பலமடங்கு பெரிதாக உள்ள அந்தக் கோள் பூமியை நோக்கி பல ஆண்டுகளாக பயணித்து வருவதாகவும், வரும் ஒக்டோபர் மாதத்தில் பூமியின் மீது மோதும் என்றும் கூறுகிறார்.

மேலும் அவர், இந்த நட்சத்திரம், பிளானட் எக்ஸ் என்று அழைக்கக்கூடிய நிபிரு உட்பட ஏழு கோளப்பாதையில் சுற்றிக்கொண்டிருக்கும் கிரகங்கள் பெரிய மற்றும் நீல நிறத்தில் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

நிபிருசில நேரங்களில் பிளானட் எக்ஸ் என்றும் அழைக்கப்படுகிறது, அது நமது சூரிய மண்டலத்தின் விளிம்பில் இருக்கும் ஒரு கிரகம் ஆகும்.

முரட்டு கிரகமான நிபிரு, ஈர்ப்பு விசையின் ஆதிக்கத்தால் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு மற்ற கிரகங்களின் சுற்று வட்டப் பாதைகளில் இடையூறுக்கு உள்ளாகியுள்ளது.

ஈர்ப்பு விசையின் காரணமாக சுற்றுவட்டப் பாதைகளில் சுற்றிக் கொண்டிருக்கும் இந்த பைனரி ஸ்டார், இந்த ஆண்டு அக்டோபர் மாத்ததில் நமது கிரகத்துடன் மோதும், ஆனால் இதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று டேவிட் மேட் தெரிவித்துள்ளார்.

இந்த நட்சத்திரத்தின் கோணங்கள் பூமியை நெருங்கிக் கொண்டிருப்பதால் இதை கண்டுபிடிக்க கடினமாக உள்ளது என்கிறார். ஏனெனில் இந்த நட்சத்திரம், நம் சூரிய குடும்பத்தில் சூரியன் செல்லும் மார்க்கமாக செல்லவில்லை, ஆனால் ஒரு சாய்ந்த கோணத்தில் தென் துருவம் வழியாக நம் கிரகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*