தென் பகுதிகளுக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

இலங்கை – சீன அபிவிருத்தி வலயம் தென் பகுதி மக்களுக்கு கிடைத்த மிகப் வெற்றி எனவும் ஹம்பாந்தோட்டை துறைமுகம் விற்பனை செய்யப்பட மாட்டாது எனவும் துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

துறைமுகத்திற்காக பெற்ற கடனை அடைப்பது மாத்திரமே இதன் ஊடாக நடக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகளில் ருகுணு அபிவிருத்தி வலயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எமக்கு இருந்த பிரச்சினைகளை தீர்த்து நாடு என்ற வகையில் உலகில் பிரபலமான மற்றுமொரு அபிவிருத்தித் திட்டத்தை ஆரம்பிக்க முடிந்துள்ளது.

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதில் கூறிக்கொண்டிருந்தால், பணிகளை செய்து முடிக்க முடியாது. துறைமுகத்திற்கான செலவு 197 மில்லியன்.

இந்த கடனை எப்படி செலுத்துவது. துறைமுக அதிகார சபையால் ஊழியர்கள் இணைத்து கொள்ளப்படவில்லை.

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் தான் இந்த மாகம்புர துறைமுகத்தின் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

நாங்கள் துறைமுகத்தை விற்பனை செய்ய மாட்டோம். கடன் அடைத்து, துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய உள்ளோம். முதலீட்டாளர்களுடன் இணைந்து இதனை மேற்கொள்கிறோம்.

கடந்த அரசாங்கத்தினால், செலுத்த முடியாது போன காணிகளுக்கான இழப்பீடுகளை நாங்கள் தற்போது செலுத்தி வருகின்றோம்.

இன்று நடந்த பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளது. மக்களுக்கு சுமையை ஏற்றாமல் எம்மால் கடனை செலுத்த முடியும்.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் கடனை கொழும்பு துறைமுகத்திற்கும் வருமானத்தில் செலுத்தி வந்தோம். இதன் காரணமாக கொழும்பு துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய முடியாது போகும்.

இன்னும் சில வாரங்களில் அடிப்படை உடன்படிக்கையை கையெழுத்திட முடியும்.

இது தெற்கு பகுதி மக்களுக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி. இரண்டாயிரம் ஊழியர்கள் வரை தேவைப்படுகின்றனர். இதனால் எம்முடன் கைகோர்த்து கொள்ளுங்கள் என அமைச்சர் ரணதுங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*