மட்டக்களப்பில் நீண்டகாலமாக தொடர் கொள்ளையில் ஈடுபட்ட நபர் கைது

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

arrest-145_2

மட்டக்களப்பில் நீண்ட காலமாக தொடர் துவிச்சக்கரவண்டி கொள்ளையில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டுவந்த விசாரணையின் அடிப்படையில் ஏறாவூர் பிரதேசத்தினை சேர்ந்த ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவரிடம் இருந்து ஒன்பது துவிச்சக்கர வண்டிகளும் நான்கு விலையுயர்ந்த கையடக்க தொலைபேசிகளும் மீட்க்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கையடக்க தொலைபேசி ஒன்று காணாமல் போனமை தொடர்பில் இடம்பெற்று வந்த விசாரணையின்போது குறித்த நபர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வந்துள்ளன.

இதன்போதே குறித்த நபர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பகுதி உட்பட பல பகுதிகளில் கொள்ளைகளில் ஈடுபட்டுவந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி எம்.எம்.ஜி.ஏ.டீகஹவத்துற தெரிவித்துள்ளார்.

குறித்த நபரால் கொள்ளையிடப்பட்ட துவிச்சக்கர வண்டி மற்றும் கையடக்க தொலைபேசிகளின் உரிமையாளர்கள் தங்களது உறுதிப்படுத்தப்பட்ட ஆவணங்களுடன் வந்து தமது சைக்கிள்களை பெற்றுக்கொள்ளலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit