20 வயதுகளில் நீங்கள் ஆரம்பிக்க வேண்டிய விஷயங்கள் எவை தெரியுமா?

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

வாழ்க்கை சற்று பரபரப்புடனும் கடினமாகவும் நகர்ந்து நீங்கள் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் உங்கள் வேலை/எதிர்காலம் என மும்முரமாக இருப்பீர்கள். எனினும், இந்த தருணத்தில் உங்களை நீங்கள் நல்ல முறையில் கவனித்துக் கொண்டு நல்ல ஆரோக்கியமான பழக்கங்களை கடைபிடிக்க வேண்டியது அவசியம்.

உணவில் கவனம்: உணவு நீங்கள் கவனமாக பின்பற்ற வேண்டிய வழக்கம். ஜங்க் ஃபுட் எனப்படும் ஆரோக்கியக் குறைவான உணவுகளை தவிர்ப்பதன் மூலம் உங்கள் உடம்பிற்கு ஏற்படும் ஆபத்துக்களை தடுக்க முடியும். அதற்குப் பதிலாக ஊட்டச்சத்து மிக்க ஆரோக்கியமான உணவை தேர்ந்தெடுங்கள். புதிய காய்கறிகள் மற்ரும் பழங்களை உண்ணத் தொடங்குங்கள். ஆரோக்கியமான ஆகாரம் உங்களது நீண்ட மகிழ்வான வாழ்விற்கு உதவும்.

கிரீன் டீ: 20 வயதுகளில் நாம் தொடங்கவேண்டிய முக்கியமான மற்றுமொரு பழக்கம் க்ரீன் டீ குடிப்பது. இதன் சுவை நன்றாயிருக்காதது தான். ஆனால் அதில் சிறிதளவு எலுமிச்சையும் தேனும் சேர்த்தால் சுவை கூடும். க்ரீன் டீ குடிக்கும் பழக்கம் உங்கள் ஆரோக்கியத்திற்கு பல்வேறு வழிகளில் உதவும் ஆண்டியாக்சிடென்டுகள் நிறைந்து காணப்படுகின்றன.

உடற்பயிற்சி: நீங்கள் ஜிம்மிற்கு செல்வீர்களோ அல்லது நடைபயிற்சி செய்வீர்களோ, ஆனால் தினமும் காலையில் உடற்பயிற்சி செய்வது அவசியம். 20 முதல் 40 நிமிட நடை அல்லது ஒட்டம் உங்கள் உடலின் இரத்த ஓட்டத்தை அதிகரித்து இதயத்தை வலுவாக்கும். ஒரு ஜிம்மில் சேருவது உங்கள் உடம்பை ஆரோக்கியமாகவும் நல்ல உடற்கட்டையும் தரும். இது உங்களை உடற்பருமன் உள்ளிட்ட பல்வேறு உடல்நல பிரச்சனைகளிலிருந்து பாதுகாப்பு தரும்.

யோகா: நீங்கள் யோகாவையும் ஒரு நல்ல உடற்பயிற்சியாக செய்ய வேண்டும். ஏனென்றால், அது உங்கள் உடம்பிற்கு பல்வேறு விதங்களில் உதவும். தினமும் யோகா செய்வது உங்களை அழுத்ததிலிருந்து விடுவித்து உங்கள் சருமத்தை பொலிவாகவும் இளமையாகவும் ஆக்கும். தினமும் யோகா செய்வது பல்வேறு நோய்களை குணமாக்கவும், தலை முடிப் பிரச்சனைகளை சரிசெய்யவும், சருமப் பிரச்சனைகளையும் கூட சரிசெய்ய உதவும்.

தினமும் சரும பராமரிப்பு செய்யும் பழக்கம்: தினமும் நல்ல ஆரோக்கியமான சருமத்துடன் நாளைத் துவங்குவது மிகவும் அருமையான உணர்வைத் தரும். நீங்கள் 20களில் இருக்கும்போது உங்கள் சருமத்தின் மீது அக்கறை கொள்வது மிகவும் முக்கியம். இந்த பருவத்தில் தான் சருமம் பல்வேறு மாற்றங்களுக்கு உட்படும். எனவே சுத்தம் செய்தல், தேய்த்து இறந்த செல்களை நீக்குதல் செய்ய வேண்டும். முக்கியமாக நீங்கள் செய்ய வேண்டியது உறங்கச் செல்லுமுன் உங்கள் முகத்தில் செய்த மேக்கப்பை கலைத்து ஒரு நல்ல மாயிஸ்சரைசரை தடவ மறக்காதீர்கள்.

டீ மற்றும் காபியை குறைத்திடுங்கள்: எப்போதும் கால்சியம் அதிகமுள்ள பால் போன்ற திரவ உணவுகளை எடுத்துக் கொள்வது உங்கள் எலும்பையும் உடலையும் வலுவாக்கும். டீ மற்றும் காபி போன்றவை அதிக காஃபைன் நிறைந்திருப்பதால் அது சருமத்திற்கு பாதிப்பை தரும். ஓரிரு வேளைகள் தவறில்லை. அடிக்கடி குடிப்பது வேண்டாம்.

இருமுறை பல் துலக்குங்கள்: நாம் வளர்ந்தபிறகு பற்களை ஒரு நாளைக்கு இருமுறை பல் தேய்ப்பது எவ்வளவு முக்கியம் என்பதை உணருகிறோம். உடலை கவனித்துக் கொள்வது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் ஒரு நாளைக்கு இருமுறை பல் துலக்குவது. வாய்ச் சுத்தம் மிகவும் முக்கியமான மஞ்சள் கறை, வாய் நாற்றம் போன்ற பல்வேறு அவமானகரமான சூழ் நிலைகளில் இருந்து நம்மை காக்கும் முக்கிய பழக்கம் என்பதை உணருங்கள்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*