உலகில் மரணத்தை விட மனதை பாதிக்கும் சில நிகழ்வுகள்!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

terrror

உலகத்தில் உள்ள எல்லா மனிதர்களுக்கும் மரணம் என்ற ஒன்று உண்டு. மரணத்தில் இருந்து யாராலும் தப்பிக்க முடியாது. இரும்பு கோட்டைகளில் போய் ஒழிந்து கொண்டாலும், மரணம் அங்கும் வந்து நம்முடைய ஆத்மாவை கைப்பற்றிக் கொண்டு போய்விடும்.

ஆனால், மரணம் எப்பொழுதும் வரும் என்பதை யாராலும் அறிந்திட முடியாது. உலகத்தில் இறப்புக்கு எல்லோருமே பயப்படுகின்றோம். அதே இறப்பை விட சில மனதை பாதிக்கும் விஷயங்கள் எல்லாம் இருக்கின்றன. அது, உடல்ரீதியாக வரக்கூடிய நோய்கள் தாம். சில நோயாளிகளை போய் நாம் சந்தித்தால் அவர்கள் கூறுவார்கள். இந்த நோயோடு கஷ்டப்பட்டுக் கிடப்பதற்கு, நிம்மதியாக போய் சேர்ந்து விடலாம் என்று சொல்வார்கள்.

அந்த விஷயங்கள் தாம் நாம் கீழே பார்க்க போவது.

பக்கவாத நோய்

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நபர்களின் வாழ்க்கை முழுவதும் படுக்கையில் தான் இருக்கின்றது. நம்மால், ஒரு நாள் கூட ஒரே இடத்தில் இருந்துவிட முடியாது.

இவர்களால் எதுவும் செய்ய இயலாத காரணத்தால் படுக்கையில் இருக்கும் இவர்களின் இதயம் துடித்தாலும், இவர்களுடைய உணர்வுகள் உயிரற்றவையே.

மரியாதையுடன் வாழ்தல்

சுய மரியாதை மற்றும் கண்ணியத்தோடு வாழ்தல் என்பது மனிதனுக்கு முக்கியமான ஒன்று. இந்த சமூகத்தில் தனக்கான சுயமரியாதையை இழக்கும் வகையில் சம்பவங்கள் அரங்கேறும்போது, எதற்காக நாம் இந்த சமூகத்தில் வாழ வேண்டும் என்ற கேள்வியோடு, இந்த உலகத்தை விட்டே போய்விடலாம் என்று எண்ணுகின்றான்.

மற்றவர்களை சார்ந்திருத்தல்

பிறர் உதவியின்றி தன்னால் இயன்ற அளவு சுதந்திரமாக வாழ வேண்டும் என்றுதான் ஒவ்வொரு மனிதனும் ஆசைப்படுவான். ஆனால், நோய்வாப்பட்டு படுக்கையில் இருக்கும்போது, அடிப்படை தேவைகள் முதல் அனைத்திற்கும் மற்றவர்களை சார்ந்திருப்பது அவர்களின் மனதினை கடுமையாக பாதிக்கின்றது.

இப்படிப்பட்டவர்களின் மனதில், நாம் மற்றவர்களுக்கு சுமையாக இருக்கிறோமா என்ற எண்ணம் எழும்.

நீங்கள் விரும்பியவர்கள் இறந்து போதல்

இந்த உலகில் நமக்கு பிடித்தமானவர்கள் இறந்துவிட்டால், நாமும் இறந்துவிட வேண்டும் என்பது அவசியமில்லை. ஆனால் நாம் உயிருக்கு உயிராக கருதிய நபர்கள், இந்த உலகில் இல்லை என்று நினைக்கும் ஒவ்வொரு நிமிடமும், நாமும் எதற்காக வாழ்கிறோம் என்ற எண்ணம் தான் வரும்.

தனிமை வாழ்க்கை

இந்த உலகில் மோசமான ஒன்று தனிமை. ஒரு மனிதனை பல்வேறு கோணங்களில் ஆட்டுவிக்கும் திறமை இந்த தனிமைக்கு உண்டு. உலகில் சில தற்கொலை சம்பவங்கள் நிகழ்வதற்கு தனிமையும் ஒரு காரணமாக இருக்கின்றது.

பெற்றெடுத்த குழந்தைகள், உறவினர்களால் நிராகரிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்படும் ஒரு மனிதனின் வாழ்க்கை மிகவும் மோசமான ஒன்றாகும்.

உடல் மற்றும் மனரீதியான கஷ்டங்கள்

உலகில் உடல் மற்றும் மனரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளாகும் மனிதர்கள் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றனர். யாரேனும் நம்மை காப்பாற்ற வரமாட்டார்களா? நாமும் இந்த உலகில் நிம்மதியாக வாழ்வோமா? என்ற எதிர்பார்ப்புகளோடு நகர்கிறது இவர்களது வாழ்க்கை.

இவர்களது வாழ்க்கை ஒவ்வொரு நிமிடமும் நரகமான ஒன்றுதான். மேலே சொன்ன விஷயங்கள் எல்லாம், மரணத்தை ஒப்பிட்டு பேசக்கூடிய துன்பங்கள் ஆகும்

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit