மாதவிடாய் கோளாறுகளுக்கு தீர்வளிக்கிறது கருஞ்சீரகம்.

பிறப்பு : - இறப்பு :

girl

பருவம் அடைந்த பெண்களில் பெரும்பாலானவர்களுக்கு மாதவிடாய் சம்பந்தமான பிரச்சனைகள் இருக்கும்.

இதற்கான எளிய மருந்து நம் வீட்டு சமையலறையிலேயே இருக்கிறது.

கருஞ்சீரகத்தின் மருத்துவ நன்மைகள்
  • மாதவிடாய் கோளாறுகள் இருக்கும் பெண்களுக்கு அடிவயிறு கனமாகி, சிறுநீர் வெளியேறுவதில் சிரமம் ஏற்படும். எனவே இதற்கு மாதவிடாய் ஏற்படும் தேதிக்கு பத்து நாட்கள் முன்பு ஒரு தேக்கரண்டி அளவு கருஞ்சீரகப் பொடியுடன், தேன் அல்லது கருப்பட்டி கலந்து தினமும் சாப்பிட்டு வர வேண்டும்.
  • மூக்கடைப்பு பிரச்சனை இருப்பவர்கள், ஒரு தேக்கரண்டி கருஞ்சீரகத்தின் தூளை 50 மி.லி. தேங்காய் எண்ணெய்யில் சூடு செய்து, பின் அதை வடிகட்டி, அதில் இரண்டு துளி மூக்கில் விட வேண்டும்.
  • கருஞ்சீரகத்தில் உள்ள நறுமண எண்ணெய், நமக்கு ஏற்படும் வயிற்று உப்புசம் மற்றும் வலியை நீக்கி, கழிவுகளை எளிதாக வெளியேற்றி, இரைப்பையில் பாக்டீரியாவால் உண்டாகும் நோய்த் தொற்று மற்றும் குடலில் உள்ள தேவையற்ற பூச்சிகளை அழிக்கிறது.
  • கருஞ்சீரக பொடியை ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து, அதை சுடுநீர் மற்றும் சிறிதளவு தேன் கலந்து அதை இரண்டு வேளைகள் பருகினால் சிறுநீரக மற்றும் பித்தப்பை கற்கள் கரையும்.
  • ஆஸ்துமா, தொடர்ச்சியான இருமல் மற்றும் நுரையீரலில் சளி போன்ற பிரச்சனை உள்ளவர்கள், ஒரு தேக்கரண்டி கருஞ் சீரக பொடியை தேன் மற்றும் அரை தேக்கரண்டி அரைத்த பூண்டு விழுதுடன் கலந்து சாப்பிட வேண்டும்.
  • கருஞ்சீரகத்தில் இருக்கும் தைமோகியோனின் என்ற வேதிப்பொருள் நமது உடம்பின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, கெட்ட கொழுப்புகளைக் குறைக்கிறது.
  • தோல் நோய்களுக்கு கருஞ்சீரகம் சிறந்த மருந்தாக இருப்பதால், கரப்பான் மற்றும் சொரியாஸிஸ் நோய், புண்களால் ஏற்படும் தழும்புகள் போன்ற பிரச்சனைகள் இருப்பவர்கள் தினமும் கருஞ்சீரகப் பொடியை அரைத்து தேய்த்து குளித்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.
  • புற்று நோய்க்கும் கருஞ்சீரகம் நல்ல மருந்தாக செயல்படுவதாக பல்வேறு ஆய்வுகள் மூலம் நிரூபணமாகி உள்ளது. எனவே புற்று நோய் உள்ளவர்கள், ஒரு தேக்கரண்டி கருஞ்சீரகத்தை சுடுநீரில் கலந்து அல்லது சுடுநீருக்கு பதிலாக தேன் கலந்தும் சாப்பிட்டு வரலாம்.
  • பெண்களின் பிரசவத்திற்கு பின்பு கருப்பையில் உள்ள அழுக்கை நீக்குவதற்கு, குழந்தை பெற்ற மூன்றாவது நாளில் இருந்து, ஒரு தேக்கரண்டி கருஞ்சீரக பொடியுடன் பனைவெல்லம் கலந்து உருண்டை செய்து, இரண்டு வேளைகள் என்று தொடர்ந்து ஐந்து நாட்கள் சாப்பிட வேண்டும்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit