தாம்பத்திய வெற்றிக்கு வழி..(வயதுவந்தோர் மட்டும்)

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

இங்கு பிரசுரிக்கப்படும் செய்திகள் பாலியல் தொடர்பான சந்தேகங்களை தீர்க்கும் முகமாகவே அன்றி கலாச்சாரச் சீர்கேட்டிற்கோ அல்லது தவறான வழிகாட்டலுக்கானதோ அல்ல என்பதனையும் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கானது என்பதனையும் கதிரவன் விரிவாக்கற் பிரிவினால் பரிந்துரை செய்யப்படுகின்றது. நன்றி!

தாம்பத்தியத்தில் தொடர் வெற்றிக்கு…..

*உறவுக்கு முன் இனிமையான உரையாடலும் உணர்வு பரிமாறலும் முன் விளையாட்டுகளும் இருக்க வேண்டும். அப்போது தான் உறவில் முழுமை பெற முடியும்.

*தாம்பத்தியம் மென்மையாகவும், நிதானமாகவும் இருக்க வேண்டும், ஆவேசமும், அவசரமும் காட்டினால் தாம்பத்தியம் அரைகுறையாகவும் அலங்கோலமாகவும் ஆகிவிடும்.

*கோபம் சண்டையை தீர்க்கக்கூடிய சக்தி செக்ஸுக்கு உண்டு. ஆனால் மனஒற்றுமை, ஏற்படாமல் உடல்களால் மட்டுமே இயங்கி உடல் வேட்கையை தணிக்க முயற்சிப்பது நல்லதல்ல.

*வயது அதிகரித்ததும் குழந்தை வளர்ந்ததும் தாம்பத்திய உறவு கொள்வது பாவம் என்று நினைக்க தேவையில்லை, இன்பம் தரும் உடலுறவுக்கு வயது ஒரு தடை அல்ல.

*கணவன் – மனைவி அந்தரங்கமான இல்லற வாழ்வில் ஒருவர் விருப்பத்தை மற்றொருவர் புரிந்து கொள்ள வேண்டும். அத்துடன் அதை முடிந்த வரை நிறைவேற்ற முயற்சிக்க வேண்டும்.

*அடிக்கடி உடலுறவு வைத்துக்கொள்ள விரும்பும் பெண்களும் உண்டு. அவர்களது விருப்பத்தை ஆண்கள் உதாசீனப்படுத்தாமல் முடிந்த வரை நிறைவேற்ற முயற்சிக்க வேண்டும்.

*தாம்பத்திய உறவை அதிகரிக்கும் சக்தி, கீரை மற்றும் பழங்களுக்கும் உண்டு. மீன், புறா, வெள்ளாட்டுக்கறி, இறால் போன்றவை மிகவும் நல்லது. பேரீச்சம்பழம், பாதாம்பருப்பு, பசும்பால் போன்றவையும் ஆண் – பெண் உறவுக்கு வலிமையும், இனிமையும் சேர்க்க கூடியவை.

*இருவரும் தூக்கத்துக்கு போகும் முன் கலவி நேரத்தை தேர்வு செய்ய வேண்டியது மிகவும் அவசியம். அலுவலக வேலையை முடித்து விட்டு நள்ளிரவில் வரும் கணவனுக்காக காத்திருந்து ஏமாந்து போயிருக்கும் அவளால் உடனடியாக கலவிக்கு தயாராக முடியாமல் போகும்.

*தாம்பத்தியத்தில் பெரும் குறையாக இருப்பது தம்பதிகளின் அவசர உடலுறவு ஆகும். யாருமற்ற நேரம், இடம் போன்றவற்றை தேர்வு செய்து தொந்தரவு இல்லாமல் உறவை அனுபவிக்கும் போது மட்டுமே இன்பத்தின் எல்லைவரை செல்ல முடியும். கூட்டு குடும்பத்தினருக்கு இது பெரும் குறையாக இருந்தால் இதற்கென சுற்றுலா செல்லும் வாய்ப்புகளை உருவாக்குதல், தாய் வீட்டுக்கு கணவனை அழைத்துச் செல்லுதல் போன்றவை அவசியமானதாகும்.

*தம்பதிகளுக்குள் முற்றிலும் தவிர்க்க வேண்டிய சொல் கூச்சம். எதற்காகவும் எப்போதும் கூச்சப்படாமல் உறவில் இறங்கும் போது தான் இருவரும் ஆசைப்பட்டதை கேட்கவும் கொடுக்கவும் முடியும்…..!

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*