ஜெயலலிதாவுக்கு வந்த காதல் கடிதம்- சுவாரசியமான பதில் இதோ.

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

jeyalove

மறைந்த முன்னால் முதல்வர் ஜெயலலிதா அரசியல் துறையில் மட்டுமின்றி வெள்ளித்திரையிலும் கோலோச்சியவர்.

ஜெயலலிதா வெள்ளித்திரையில் கோலோச்சியபோது அவருக்கென்றே தனி ரசிகர் பட்டாளமே இருக்கும்.

அப்படி ஒரு தீவிர ரசிகனிடம் இருந்து தனக்கு வந்த காதல் கடிதத்திற்கு அவர் அளித்துள்ள பதில் மூலம் நிச்சயம் அவர் தனித்துவம் வாய்ந்த தலைவர் தான் என்பதை நமக்கு காட்டுகிறது.

காதல் கடிதம்

ஜெயலிதாவின் தீவிர ரசிகன் ஒருவன், அவருக்கு எழுதியிருந்த கடிதத்தில், நான் உங்களை மனதார காதலிக்கிறேன்.

நீங்கள் இல்லையென்றால் என்னால் வாழமுடியாது. அதனால் என்னை திருமணம் செய்துகொள்ள வேண்டும்.

ஒரு குறிப்பிட்ட திகதியை அதில் தெரிவித்து, இந்த திகதியில் நீங்கள் என்னை வந்து சந்தித்து திருமணம் செய்துகொள்ளாவிட்டால் நான் தற்கொலை செய்துகொள்வேன் என குறிப்பிட்டிருந்தார்.

இந்த கடிதத்தை படித்த ஜெயலலிதா அதனை கண்டுகொள்ளாமல் விட்டுள்ளார். அந்த ரசிகன் குறிப்பிட்ட திகதியும் கடந்து, சில நாட்கள் கழித்து அதே ரசிகனிடம் இருந்து மீண்டும் ஒரு கடிதம் வந்துள்ளது.

அதற்கு பதில் கடிதம் எழுதிய ஜெயலலிதா, எனக்கு கணவராக வரப்போகிறவர் கொடுத்த வாக்கை காப்பாற்றுபவராக இருக்க வேண்டும் என நான் ஆசைப்படுகிறேன்.

முந்தையை கடிதத்தில் நீங்கள் கொடுத்த வாக்கை காப்பாற்றவில்லை. அப்படியிருக்கையில் நான் எப்படி உங்களை திருமணம் செய்து கொள்ள முடியும்? என்னை மன்னிக்கவும் என எழுதியுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit