பிரித்தானிய மகாராணி, அமெரிக்க ஜனாதிபதி என முக்கிய 50 பிரபலங்கள் மரணம் அடைவார்கள்? அதிர்ச்சி ரிப்போர்ட்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

2017 ஆம் ஆண்டு பிரித்தானிய மகாராணி உட்பட 50 பிரபலமானவர்கள் மரணமடைவார்கள் என்று பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல இணையதளமான Morbid website ஒன்று கடந்த ஆண்டைப் போலவே இந்தாண்டும் ஒரு சோகமான ஆண்டாக இருக்கும் என்று கூறிப்பிட்டுள்ளது. அடுத்து வரும் 12 மாதங்கள் முக்கிய பிரபலங்கள் சிலர் மரணமடைவார்கள் என்று கணித்து கூறியுள்ளது.

இதில்

  • Bruce Forsyth (88) (பிரபல ஆங்கில தொலைக்காட்சி தொகுப்பாளர்),
  • Vera Lynn (99) (பிரபல பாடகி மற்றும் பாடல் ஆசிரியர்),
  • Elizabeth (90) (பிரித்தானிய மகாராணி),
  • Philip (95) (பிரித்தானிய இளவரசர்),
  • Dave Prowse (81), (பிரித்தானியாவின் பாடி பில்டர் மற்றும் நடிகர்)

உள்ளிட்டோர் பெயர்களும் இதில் அடங்கியுள்ளது.

மேலும் இந்த இணையதளம்

  • Robert Mugabe(92) (ஜிம்பாப்வே ஜனாதிபதி),
  • Desmond Tutu (85) (தென் ஆப்பிரிக்காவின் சமூக உரிமை ஆர்வலர்),
  • Hugh Hefner (90) (அமெரிக்க முன்னாள் பத்திரிக்கையாளர்),
  • George Bush Snr (92) (அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி)

ஆகியோரும் 2017 ஆம் ஆண்டு மரணம் அடைவார்கள் என்று கணித்துள்ளது.

இந்த பட்டியலில் பிரித்தானிய மக்களால் பெரிதும் விரும்பப்பட்ட நடிகர் Leslie Phillips (92), பிரித்தானியாவின் நகைச்சுவை எழுத்தாளர் Dennis Norden(94), மற்றொரு பிரித்தானியாவைச் சேர்ந்த நடிகரான Peter Sallis (95) உள்ளிட்டோரும் உள்ளனர்.

மேலும் இந்த இணையதளம் அவர்களில் உடல் நிலைகள் குறித்து தான் இந்த கணிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது. இதில் பெரும்பாலனோர் 90 வயதுகளை அடைந்தவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளது.

ஆண்டுதோறும் இதே போன்று முக்கியமாக உள்ள 50 பிரபலங்கள் இறப்பை கணித்து கூறும் என்றும் அதில் சில சரியாக நடந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு இந்த இணையதளம் கணித்தது போலவே 12 முக்கிய பிரபலங்கள் மரணமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. அதில் Zsa Zsa Gabor (நடிகை மற்றும் சோசியலைட்), Liz Smith (பிரித்தானிய நடிகை) மற்றும் கியூபா நாட்டின் முன்னாள் ஜனாதிபதி Fidel Castro உள்ளிட்டோர் இதில் அடங்குவர் என கூறியுள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*