சிக்கினார் விமல் வீரவங்ச! இனி யார் தான் காப்பாற்றுவது…!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

முன்னாள் ஜனாதிபதியின் செல்ல குழந்தை என அழைக்கப்படும் விமல் வீரவங்சவின் 58 வாகனங்கள் தொடர்பான துஸ்பிரயோக நடவடிக்கைகள் அம்பலத்திற்கு வந்துள்ளது.

இவ்விடயம் தொடர்பான விரிவான தகவல்கள் இதோ……!

இவ 7 வாகனங்கள் ஜனாதிபதி செயலகத்தினால் வாடகை அடிப்படையில் பெற்றுக் கொண்டு தேசிய சுதந்திர முன்னணிக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதில் 7 வாகனங்கள் விமல் வீரவன்சவினால் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பில் தகவல் இருந்த ஆவணங்கள் இரண்டு ஜனாதிபதி செயலகத்தில் காணாமல் போயுள்ளதாக விசாரணை குழுவினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதில் ஒரு ஆவணத்தில் இது தொடர்பில் தகவல் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த 7 வாகனங்களுக்காக ஒரு கோடி 59 லட்சத்து 1564 ரூபாய் மக்கள் பணத்தில் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த 7 வாகனங்களும் விமல் வீரவன்சவின் நெருங்கிய நண்பர்களினால் பயன்படுத்தப்பட்டுள்ளதென விசாரணை குழுவினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதன் கீழ் KT-5335 (சரத் வீரவன்ச), KO-1375 (பிரியன்ஜித்), PB-0645 (நிமல் பிரேமவன்ஷ), PE-6432(கொடிதுவக்கு), JP-4312 (பிரியந்த பெல்லன), KO-9480 (மொஹமட் முஸ்ஸமில்), KO-9416 (பத்ம உதயஷாந்த) ஆகியோர்களினால் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக பொறியியல் கூட்டுத்தாபனத்திற்கு வாடகை அடிப்படையில் பெற்றக் கொண்ட 51 வாகனங்களை தவறாக பயன்படுத்தி அரசாங்கத்திற்கு 41 மில்லியன் ரூபா நட்டம் ஏற்படுத்தியுள்ளதாக தற்போது வரையில் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த 51 வாகனங்களில் 40 வாகனங்கள் நிலையான பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவர்கள் அப்போதைய விமல் வீரவன்சவின் அமைச்சில் அல்லது எந்தவொரு நிறுவனத்திற்கும் தொடர்புபடாதவர்கள் என தெரியவந்துள்ளது.

அதற்கமைய பிரசன்ன சன்ஜீவ தென்னகோண் என்பவருக்கு KK-8941 ரக வாகனமும், ஏ.என்.எஸ்.மென்டிஸ் என்பவருக்கு KP-3768 ரக வாகனமும் வழங்கப்பட்டுள்ள நிலையில் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரருக்கு இடைக்கிடையே 6 வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அந்த வாகனங்களுக்குள் KP-4802, HO-6514, HN-2194, JS-9725, PD-2563, CAC-3327 ஆகிய வாகனங்கள் உள்ளடக்கப்படுகின்றன. சத்தாதிஸ்ஸ தேரரின் வாகனத்திற்கு மாத்திரம் மாதாந்தம் 38 ஆயிரம் மற்றும் 45 ஆயிரம் ரூபாய் என்ற கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.

பல வாகனங்கள் தங்கள் குடும்ப உறவினர்களுக்காக பகிர்வதற்கு விமல் வீரவன்சவினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், விசாரணைகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த வாகன மோசடியினால் அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள நட்டம் கிட்டத்தட்ட 600 லட்சம் ரூபா என தற்போது வரையில் விசாரணைகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*