புடவையா?… பொண்ணுங்க ஏன் பயப்படுறாங்கனு தெரியுமா?

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

சேலை, சல்வார்கமீஸ், டாப்ஸ், லெகிங்ஸ், மிடி, சுடி… என பெண்களுக்கான ஆடைகளின் வரத்து அதிகரிச்சிட்டே இருந்தாலும் இந்தியாவைப் பொறுத்தமட்டில் சேலைதான் கெத்து!. ஆனா பாருங்க…என்னதான் கெத்தாக இருந்தாலும் சேலை அணிந்து கொள்ள எத்தனைப் பெண்களுக்குப் பிடிச்சிருக்கு?

பெர்ஃபெக்ட் மேட்சிங் வேணும்ல!

என்னதான் பொண்ணுங்க ரெடியாக லேட் பண்றாங்கன்னு சொன்னாலும் அதுக்கான ரீசன் என்னவென்று ஆராய்ச்சி பண்றோமா? ஒரு சேலையை எடுத்து கட்டிக்கலாம்னு ஆசைப்பட்டா அதுக்கு மேட்சிங்கா அதே கலர்ல ஸ்கர்ட், பிளவுஸ், கம்மல், நெக்லஸ், பொட்டு, கிளிப், ஹாண்ட் பேக், செப்பல்னு உடம்புல மாட்டிக்கிற அத்தனையும் பெர்ஃபெக்ட் மேட்சிங்கா இருக்கணும். இதையெல்லாம் தேடி எடுத்து கட்டி முடிக்குறதுக்குள்ள …ஆத்தி!

இஸ்திரி போடணும் பாஸ்!

சேலைனா சும்மா இல்ல, பட்டு, காட்டன், டிசைனர் எம்ப்ராய்டரி, டிசைனர் பார்ட்டிவேர், ஷிஃபான், ஜார்ஜ் ஜெட், சில்க், நெட்டட்னு எக்கச்சக்க வெரைட்டிஸ் இருக்கு. இதையெல்லாம் ஊற வெச்சு துவைச்சி, காயப் போட்டு மடிச்சு இஸ்திரி போடுறதெல்லாம் சாதரணமில்ல. சில புடவைகளை வாஷிங்மிஷின்ல துவைக்க முடியாது. காட்டன் புடவைகளை கஞ்சி போட்டு அயர்ன் செஞ்சு முடிக்குறதுக்குள்ள நாக்கு தள்ளிடும். கடையில கொடுத்துகூட இஸ்திரி போட்டுக்கலாம்.. என்ன கொஞ்சம் தாறுமாறா காசு செலவாகுமே!

டைம் இல்லை மச்சி!

ஒரு சேலையைக் கட்டிக்கலாம்னு எடுத்தா, ஈஸியா கட்ட முடியுதா? முந்தி எது, உள்பக்கம் எது’னு கண்டுப்பிடிச்சு, கழுத்துல இருந்து கால் வரைக்கும் சேஃப்டி பின்களைக் குத்தி, மடிப்பைச் சரி செஞ்சு சேஃப்டியா இருக்கோமானு உறுதிப் படுத்தினப் பிறகுதான் வெளியவே வர முடியுது. சேலையைத் தேடி அதுக்கு மேட்சிங்கைத் தேடி…. இதுக்கெல்லாம் குறைஞ்சது அரைமணி நேரமாச்சும் ஆகுமே… அவ்வ்!

ஒன்ஸ்மோர் போரிங்ல!

ஒரு சல்வாரை திரும்பத் திரும்ப எத்தனை முறை போட்டுக்கிட்டாலும் அது கேஷ்வெல் டிரஸ் ஃபீல் கொடுக்கும். ரிப்பீட் ஆனாலும் யாரும் கேட்க மாட்டாங்க. ஆனா புடவையை கட்டிக்கிட்டு காலேஜுக்கோ ஆஃபிஸுக்கோ போனால்… இன்னைக்கு என்ன ஸ்பெஷல்னு கேட்பாங்க. அவ்ளோதான் அந்த ஸ்பெஷல் டிரஸைத் திரும்பவும் போட்டுக்கணும்னா அதுக்கு ஒரு பெரிய்ய்ய இடைவெளி தேவைப்படுது!

அய்யோ காத்தடிக்குதே!

ஜீன்ஸ், சல்வார் இதெல்லாம் எவ்ளோ காத்தடிச்சாலும் பெரிய அளவுல கஷ்டம் இருக்காது. ஆனா இந்த சேலை இருக்கு பாருங்க, புயல், மழைனு எது வந்தாலும் ஜாக்கிரதையா இருக்கணும். சேலைனா டேக் கேர் கேர்ள்ஸ் தான்!

ஸ்லிம் சீக்ரெட் போயிடுமே!

என்ன கொஞ்சம் லைட்டா சாப்பிட்டு வெயிட் போட்டிருப்போம். அது ஒரு குத்தமா? மாடர்ன் டிரஸ்ல வெயிட் போட்டதை அவ்ளோ சீக்கிரம் கண்டுப்பிடிக்கவே முடியாது. ஆனா தினமும் மாடர்ன் டிரஸ்ல வந்துட்டு திடீர்னு புடவைல வந்தா என்ன ஆகும்? ‘அய்யோ இவ்ளோ குண்டா நீ?’னு இன்பாக்ஸ்ல மெசேஜ் வரும். ஸ்லிம் சீக்ரெட் அவ்ளோ தானா?

அப்படியெல்லாம் பாக்கப்படாது!

கஷ்டப்பட்டு நேரம் எடுத்து சேலையைக் கட்டிக்கிட்டா, அடுத்து என்ன நடக்கும்? இன்னைக்கு சேலைல நீ கியூட்டா இருக்குறனு பாராட்டித் தள்ளுவாங்க ஒருபக்கம். ஆனா ரிஸ்க் எடுத்து கட்டிட்டுப் போனா குஷி படத்துல வர்ற அந்த சீன் திடீர்னு ஞாபகத்துல வந்து பக்கு பக்குனு இருக்குமே!

டாய்லெட் ரொம்ப கஷ்டம்!

வெஸ்டர்ன் டாய்லெட்கள் இப்ப அதிகமாயிடுச்சு. சேலையைக் கட்டிக்கிட்டு போய்ட்டு வர்றதுக்குள்ள போதும் போதும்னு ஆகிடும். அதோட அசௌகரியத்தை இதுக்கு மேலயுமா விளக்கமா சொல்ல முடியும்?

ஸ்ஸப்பா…காத்தே வரல!

ஒரு சேலையை கட்டிக்கிட்டா அது வெறும் சேலை மட்டுமில்ல, அதோட சேர்த்து அணியுற மொத்த ஆபரணங்களையும் சேர்த்தா வெயில் காலத்துல ஸ்வட்டர் மாதிரி ஃபீல் கொடுக்கும். அவ்ளோ வெயிட்டையும் தூக்கிட்டு மொத்த வேலையையும் செஞ்சு முடிக்குறதுக்குள்ள சமயங்கள்ல முந்தானையே விசிறி ஆகிடும். ஹும்…புழுக்கம் இல்லாட்டி நல்லாதான் இருக்கும்.

பயந்து பயந்து வருதே!

சேலை கட்டிக்கிட்டா டூவீலர்ல போகும் போது ஜாக்கிரதையா போகணும். பஸ்ல ஏறும் போதும் கவனமா இருக்கணும். கொஞ்சம் வேகமா நடந்தாலும் தடுமாறி விழ வாய்ப்பிருக்கு. பழகினவங்களுக்கு இதெல்லாம் ஈஸினாலும் புதுசா கட்டிப் பழகுறவங்க நடக்க, ஓட, வேலை செய்ய எல்லாத்துக்கும் பயந்துடுவாங்க. அப்புறம் என்ன? எதுக்கு ரிஸ்க்குனு சேலையை மடிச்சு பீரோவுல வச்சு பூட்ட வேண்டியதுதான்!

பட்ஜெட் இடிக்குதே!

ஒரு சேலை வாங்குனா அதுக்கு மேட்சிங் அது இதுனு ஆகுற செலவுக்கு ரெண்டு மூணு சல்வார் எடுத்துட்டு போயிடலாம். நம்ம கையில டிரஸ் கலெக்‌ஷனும் அதிகமா இருக்கும். டக்குனு எடுத்தோமா, போட்டோமானு போயிட்டே இருக்கலாம். எதுக்கு சேலைக்காக ஹஸ்பெண்ட்கிட்ட சண்டை போடணும் பாருங்க!

அவ்ளோ ஈஸியா வாங்கிடுவோமா?

என்னதான் சேலை கட்டுறது கஷ்டம்னாலும் அதை கடையில போய் எடுக்குறதுக்குள்ள படுற பாடு இருக்கே. ஒரு சேலை எடுக்குறதுக்கு 100 சேலையைக் கலைச்சுப் போடணும். ஒரு மணி நேரத்துக்கு கம்மியா சேலையை செலக்ட் பண்ணினதா சரித்திரமே இல்ல.. அப்புறம் கடைக்கு வெளியே இருக்குற ஆண்கள் வெயிட்டிங் லிஸ்ட்ல உட்கார்ந்துட்டு ஃபேஸ்புக், வாட்ஸ் அப்னு பிஸியாகிடுவாங்க. எதுக்கு வம்பு? அதான் சேலையே கட்டறது இல்லைங்றோம். ஙே!

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*