தயவு செய்து இந்த அறிகுறிகளை அலட்சியபடுத்தாதீர்கள்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

HIV – Human immuno deficiency virus எனப்படுவது எய்ட்ஸ் நோயை உருவாக்கும் கிருமியாகும். இது பாதுகாப்பற்ற உடலுறவு, மருத்துவ சிகிச்சை அல்லது ஆய்வுகளில் பயன்படுத்தப்படும் தூய்மையற்ற ஊசிகள் போன்றவற்றால் அதிகம் பரவுகிறது.

சில முக்கிய அறிகுறிகளை வைத்து ஒருவருக்கு இந்த நோய் இருக்கிறதா என அறிந்து கொள்ள முடியும்.

காய்ச்சல்

இது எச்.ஐ.வியின் முக்கிய அறிகுறியாகும். காய்ச்சல் பலருக்கும் வரும். இது விரைவில் குணமாகிவிட்டால் பிரச்சனையில்லை. ஆனால் குணமாகாமல் தொடர்ந்தால் மருத்துவரை அணுகி இரத்த பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.

உடல் சோர்வு

ஒருவரை எச்.ஐ.வி கிருமி தாக்கினால் முதலில் அது அவர் உடல் வலிமையை தான் பாதிக்கும். இதனால் நாள் முழுவதும் உடல் சோர்வாக காணப்படும். இப்படி தொடர்ந்தால் உடனே மருத்துவர்களிடம் ஆலோசனை செய்ய வேண்டும்.

தசை வலிகள்

கால் பகுதி, முதுகு, மற்றும் எலும்பு தசைகள் காரணமே இல்லாமல் வலித்து கொண்டேயிருந்தால் அது கூட எச்.ஐ.வி கிருமி தாக்கியதற்கான அறிகுறிகள் தான் என்பதை மறவாதீர்கள்.

கடுமையான தலைவலி

எச்.ஐ.வி பாதிக்கப்பட்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தானாகவே குறைய தொடங்கிவிடும். இதன் காரணமாக தலைவலி, தொண்டை வலி போன்ற விடயங்களை அடிக்கடி ஏற்ப்படும்

அதிக வியர்வை

இரவு நேரத்தில் நல்ல காற்றோட்டமான இடத்தில் இருந்தும் வியர்த்தாலோ, மூச்சு விடுவதில் சிரமம் ஏற்ப்பட்டாலோ உடனே மருத்துவர்களை அணுகுவது நலம் பெயர்க்கும்.

ஆரோக்கியமற்ற நகங்கள்

சாதாரணமாக இருந்த நகங்களின் நிறம் திடீரென மஞ்சள் நிறத்தில் மாறினாலோ அல்லது நகத்தின் வடிவில் மாறுதல் தெரிந்தாலோ அது கூட இந்த நோயின் முக்கிய அறிகுறி தான்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*