உங்கள் தமிழைத்தெரிந்து கொள்ளுங்கள் நாம் பேசும் சொற்களா இவை? : – ஈழத்து நிலவன்.

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

tamil

நாம் அன்றாடம் பேசிட எழுதிட எத்தனையோ சொற்களைப் பயன்படுத்துகிறோம்.
நாம் பயன்படுத்தும் சொல்லுக்கு நாம் குறிக்க விரும்பும் பொருளன்றி வேறு பொருளும் இருக்கலாம். அல்லது நாம் குறிப்பிட்ட சொல்லுக்கு உரிய பொருளை அறியாமல் அதனைப் பயன்படுத்தவும் செய்யலாம். சில சொற்கள் நாளடைவில் தம் நுண்ணிய பொருள் வேறுபாடு மறைந்து ஒரே பொருளாய்ப் போய்விடலாம்.

பயன்பாட்டில் உள்ள மொழியின் தன்மை இது.

பேசுதல் என்கிற பொருளைக் குறிக்கத் தமிழில் பல சொற்கள் உண்டு.

அறைதல், இயம்புதல், இசைத்தல், உரைத்தல், கூறுதல், சாற்றுதல், நவிலுதல், நுதலுதல், பகர்தல், பறைதல், பன்னுதல், புகலுதல், புலம்புதல், மாறுதல், மொழிதல், என்பன அவற்றுள் சில.

ஆனால் பேசுதலுக்கும் அதற்கு இணையாக வழங்கப்படுகின்ற இச்சொற்களுக்கும் நுண்ணிய வேறுபாடுண்டு.

இதோ பொருள்:

பேசுதல் – ஒருமொழியிற் சொல்லுதல்.
அறைதல் – ஓங்கிப் பேசுதல், வன்மையாகச் சொல்லுதல்
இயம்புதல் – இனிமையாகச் சொல்லுதல், இசைக்கருவி இயக்கிச்சொல்லுதல்
இசைத்தல் – கோவையாகச் சொல்லுதல்
உரைத்தல் – நூலுக்கு உரைகூறுதல், விளக்கிச்சொல்லுதல்
கூறுதல் – பாகுபடுத்திச் சொல்லுதல்
சாற்றுதல் – பலரறிய நல்லுரை கூறுதல்
நவிலுதல் – நாவினால் ஒலித்துப் பயிலுதல்
நுதலுதல் – சொல்லித் தொடங்குதல்
நுவலுதல் – நூலுரைத்தல், நுண்பொருள் கூறுதல்.
பகர்தல் – பண்டங்களின் விலை கூறுதல்.
பறைதல் – உரத்துச் சொல்லுதல்.
பன்னுதல் – பணிக்காய் ( விவரமாய் )ச் சொல்லுதல்.
புகலுதல் – விரும்பிச் சொல்லுதல்
புலம்புதல் – தனிமையிற் சொல்லுதல்.
மாறுதல் – திருப்பிச் சொல்லுதல்., மறுமொழி கூறுதல்.
மொழிதல் – சொற்களை நன்றாய்ப் பலுக்கிச் சொல்லுதல்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit