வால்வெள்ளியில் தரை இறங்கிய ஃபிலே ஓடத்தில் பேட்டரி பிரச்சினை!:விஞ்ஞானிகள் கவலை

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

ESA இன் றொசெட்டா விண்கலம் சுமார் 10 ஆண்டுகள் பயணித்து சூரியனைச் சுற்றி வரும் 67P என்ற வால் நட்சத்திரத்தை சமீபத்தில் அண்மித்து 100 கிலோ எடையுடைய ஃபிலே என்ற ஆய்வு கலத்தை அதன் தரையில் புதன்கிழமை இறக்கியது.

விண்வெளி ஆய்வில் இன்னொரு முக்கிய மைல்கல்லாகக் கருதப் படும் இதன் செயற்திட்டத்தில் தற்போது சிறு பிரச்சினை எழுந்துள்ளது றொசெட்டா ஆய்வு விஞ்ஞானிகளைக் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

67P வால் நட்சத்திரத்தில் தரையிறங்கும் போதே ஃபிலேவின் 3 கால்களில் 1 சேதமடைந்து விட்டது. ஆயினும் குறித்த வால்நட்சத்திரம் குறித்த புகைப்படங்களை ஃபிலே அனுப்பத் தொடங்கியுள்ளது. ஆனால் ஃபிலே இன் பிரதான பேட்டரியிலுள்ள சார்ஜ் தீர்ந்து வருவதால் அது சனிக்கிழமைக்கு மேல் நீடிக்காது என்று புலப்பட்டுள்ள நிலையில் இதனை சார்ஜ் செய்யவோ அல்லது நீண்ட காலம் ஆய்வு செய்யவோ சூரிய ஒளி ஃபிலேயின் சூரியப் படல்களில் பட்டு மின்னை உற்பத்தி செய்தால் தான் உண்டு என்ற நிலையில் தற்போது 67P வால் நட்சத்திரம் சூரியனுக்கு அண்மையில் இல்லாததாலும் ஃபிலே இறங்கியுள்ள பகுதியில் சூரிய ஒளி படுவதில்லை என்பதாலும் இவ்வழி அடைக்கப் பட்டுள்ளது என்பது துரதிர்ஷ்டமாகும்.

மேலும் ஃபிலேவை சூரிய ஒளி நன்கு படும் இடத்துக்கு மாற்ற முயற்சிக்கலாம் என்றாலும் அதைத் திட்டமிட்டு செயற்படுத்த நேரம் போதாது எனப்படுகின்றது. எனவே முன்னர் சுமார் 9 மாதங்களுக்கு ஃபிலே ஓடம் வால்நட்சத்திரம் 67P குறித்த தகவல்களைத் திரட்டுவதற்கு திட்டமிடப் பட்டிருந்த நிலையில் தற்போது அதன் பேட்டரி தீர்வதற்கு முன் எவ்வளவு தகவல்களைத் திரட்ட முடியுமோ அந்தளவு தகவல் பெற அது இயங்க வைக்கப் பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*