தொழில் கோரி முன்னாள் போராளிகளால் சிவில் பாதுகாப்பு திணைக்களம் முற்றுகை! (Video)

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

கிளிநொச்சி இரணைமடுவிலுள்ள சிவில் பாதுகாப்பு திணைக்களத்திற்கு முன்னால் இன்று காலை ஒன்று திரண்ட முன்னாள் போராளிகள் தமக்கு வேலைவாய்ப்பை வழங்குமாறு வலியுறுத்தியதுடன், தர்க்கத்திலும் ஈடுபட்டனர்.

புனர்வாழ்வு பெற்று விடுதலையான காலம் முதல் இதுவரை தாம் நிரந்த தொழில் இன்றி பெரும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கிவருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

புனா்வாழ்வு பெற்ற காலத்தில் தமக்கு பண்ணை பயிற்சிகளே வழங்கப்பட்டது என குறிப்பிடும் முன்னாள் போராளிகள், தமக்கு சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் வேலைவாய்ப்பை வழங்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.

சிவில் பாதுகாப்புத் திணைக்களத்திற்கு புதிதாக ஆட்சேர்ப்பு இடம்பெறுவதாக தமக்கு தகவல் கிடைத்ததன் அடிப்படையில் இன்றைய தினம் சிவில் பாதுகாப்பு திணைக்களத்திற்கு வருகைதந்ததாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும் புதிதாக ஆட்சேர்ப்பு இடம்பெறுவதாக வெளியான தவறான தகவலை அடிப்படையாக கொண்டு நூற்றுக்கணக்கான முன்னாள் போராளிகள் இன்று ஒன்று திரண்டதாக சிவில் பாதுகாப்புத் திணைக்கள கிளிநொச்சி கட்டளை அதிகாரி மேஜர் சாகர வீரசிங்க குறிப்பிட்டார்.

சிவில் பாதுகாப்பு திணைக்களம், தற்போது புதிதாக ஆட்கள் எவரையும் உள்வாங்கும் நிலையில் இல்லை எனக் குறிப்பிட்ட சாகர வீரசிங்க, முன்னாள் போராளிகளின் நிலையை பார்க்கும் போது கவலையாக உள்ளது எனவும் குறிப்பிட்டார்.

இந்த விடயத்தில் தம்மால் எதுவும் செய்ய முடியாது எனவும் கொழும்பிலுள்ள உயர்மட்ட அதிகாரிகளே இது குறித்து தீர்மானிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டாா்.

இதனையடுத்து சிவில் பாதுகாப்பு திணைக்கள பகுதியில் இருந்து வெளியேறிய முன்னாள் போராளிகள் இரணைமடுச் சந்தியில் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தில் வேலைவாய்ப்பு கோரி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதன் போது சில பெண் முன்னாள் போராளிகள் குழந்தைகளுடன் வேலைவாய்ப்பு கோரி காத்திருந்து பரிதாபமான நிலைமையும் காண முடிந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

இதேவேளை 170 போ் கையொப்பம் இட்ட, வேலைவாய்ப்பு கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்றை கிளிநொச்சி அரசாங்க அதிபா் சுந்தரம் அருமைநாயகத்திடம் முன்னாள் போராளிகள் கையளித்துள்ளனா்.

அத்துடன் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கான மகஜரை பாராளுமன்ற உறுப்பினா் அங்கஜன் இராமநாதனிடம் கையளிக்கவும் அவர்கள் தீர்மானித்துள்ளனா்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*