ஞானலிங்கேச்சுரத்தில் பொதுப்புத்தாண்டு சிறப்புவழிபாடு.(Video)

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

31. 12. 2016 சனிக்கிழமை நள்ளிரவு 00.00 மணிக்கு புதிதாகப் பிறக்கும் பொதுப்புத்தாண்டு சிறப்புத் தீபவழிபாடு நடைபெற்றது.மறுநாள் 01. 01. 2017 ஞாயிற்றுக்கிழமை காலை 09.00 மணிமுதல் ஞானாம்பிகை உடனாய ஞானலிங்கேச்சுரப்பெருமானிற்கும் ஞானலிங்கேச்சுரத்தில் எழுந்தருளி அருளாட்சி புரியும் தெய்வங்கள் யாவற்கும் சிறப்பு திருமுழுக்கும் சிறப்பு வழிபாடுகளும் செந்தமிழ்த்திருமறையில் நடைபெற்றது.

பொங்குதமிழ் எழுந்தாட தமிழோங்க
சங்கத் தமிழ் பொலியத் தமிழ்க் குலம்
சிறந்தோங்க முந்து குஞ்சரன் முதலானவன்
ஞானாம்பிகை உடனாய ஞானலிங்கேச்சுரன் அருள
பேரரசியே ஞானாம்பிகை புத்தாண்டு
யாவற்கும் மகிழ்வுறப் பணிக்கவே!
எனும் வாழ்த்து திருக்கோவிலால் யாவருக்கும் பகிரப்பட்டது.

சிவஞானசித்தர்பீட நிறுவனர் திருநிறை. சிவயோநாதன் ஐயா மற்றும் தில்லையம்பலம் ஐயா அவர்கள் தமது நல்லாசிகளை சிறப்புரையாக வழங்கினார். திருநிறை. யோகன் ஐயா அவர்கள் சைவநெறிக்கூடம் 2017ம் ஆண்டில் தமிழர்கள் வரலாற்றினை ஆவணப்படுத்தும் சிறப்பு செயற்திட்டத்;தினை படைக்கும் ஆண்டாக அறிவித்தார்.

சுவிற்சர்லாந்தில் சொலத்தூன் மாநிலத்தில் எதிர்வரும் 17. 03. 2017 நடைபெறவிருக்கும் மாநில பொதுத்தேர்தலில் 17ம் நிரலில் சுவிற்சர்லாந்து சமூகக்கட்சிசார்பில் போட்டியிடும் ஈழத்தமிழரரும், ஏறோலைன் நிறுவனத்தினரின் உரிமையாளருமான திருநிறை. சிறீஸ்கந்தராஜா ராஜமாணிக்கம் அவர்களும் ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் தமிழ்வழிபாட்டு சிறப்புத்தொடர்பாக உரையாற்றினார்.

சுவிற்சர்லாந்தின் அனைத்து திசைகளில் இருந்தும் பல்லாயிரம் சைவத்தமிழ் அடியார்கள் வருகைதந்து செந்தமிழ்வழிபாட்டில் ஞானலிங்கேச்சுரரை வழிபட்டு நிறைந்தனர். வருகையளித்த அடியார்கள் யாவரும் கருவறைவரை சென்று தங்கள் கரங்களால் இறைவனை வழிபட்டனர், மலர்களால் அர்ச்சித்தனர்.

நண்பகல் 12.00 மணிக்கு ஞானலிங்கேச்சுரத்தில் குடிகொண்டு அருளாட்சி புரியும் தெய்வங்கள் யாவருக்கும் சிறப்பு தீபவழிபாடு ஒரேநேரத்தில் நடைபெற்றது. ஆறுவகைத் திருச்சுவை அருளமுது படைத்து அடியார்களுக்கு அமுதளித்து மகேச்சுர வழிபாட்டுடன் வழிபாடுகள் சிறப்புடன் நிறைவுற்றது.

அன்பும் அறமும் நிறைந்து செழிக்க, நால்வர் பெருமக்கள் தமிழ்த்திருமறை நிறைந்து பலத்து ஒலிக்க 2017ம் ஆண்டு பேர்ன்நகரில் பல்லாயிரம் ஈழத்தமிழர்களுக்கு ஞானலிங்கேச்சுரர் திருவடியில் மலர்ந்தது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*