தினமும் 5 வால் நட் சாப்பிட்டால் நடக்கும் அற்புதங்கள் தெரியுமா?

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

உடலை ஆரோக்கியமாக காக்க வேண்டும் என நினைப்பவர்கள் தேடி தேடி காய்கறிகள், பழங்களை சாப்பிடுவார்கள். அவ்வாறெனில் நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தை இன்னும் பலப்படுத்திட நட்ஸ் சாப்பிடுகிறீர்களா?

பாதாம், முந்திரி, வால் நட், வேர்க்கடலை ஆகியவை அற்புத சத்துக்களையும் அதிசய பண்புகளையும் கொண்டுள்ளன. அதிலும் குறிப்பாக வால் நட் சாப்பிடுவது விசேஷமானது. தினமும் 5 வால் நட் சாப்பிடுங்கள். 4 மணி நேரத்திற்கு பிறகு என்ன நடக்கும் தெரியுமா?

வால் நட்டின் சத்துக்கள்:

முதலில் அதன் நன்மைகளை தெரிந்து கொள்வதற்கு முன் அதிலுள்ள சத்துக்களை தெரிந்து கொள்ளுங்கள். ஒமேகா-3, நிறைவுறா கொழுப்பு அமிலம், விட்டமின் ஈ, ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆகியவை உள்ளன. உடலுக்கு தேவையான மிக முக்கியமான மினரல் அனைத்தும் வால்நட் கொண்டுள்ளன.

மன அழுத்தம் போக்கும்:

நீங்கள் எப்போதும் ஒரு டென்ஷனான சூழ் நிலையில் இருக்கிறீர்களா? அப்படியென்றால் வால் நட்டை கை நிறைய சாப்பிடுங்கள். சாப்பிட்ட பிறகு உங்கள் மன அழுத்தத்தை குறைத்து உங்களுக்கு புத்துணர்வு தருகிறது. அதோடு உங்களுக்கு உடல் சோர்வு இருந்தாலும் அதனை போக்குகிறது.

இதயத்தை வலுப்படுத்தும்:

அசுத்த ரத்தத்தை சுத்தகரித்து சுத்த ரத்தத்தை மூளைக்கு கடத்த வால் நட்டிலுள்ள சத்துக்கள் மிகவும் உதவிபுரிகிறது. இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட் இதய நோய்கள் வராமல் காக்கிறது. தினமும் சாப்பிட்டால் இதயம், கொழுப்பு சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் காக்கலாம் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

மூளை பாதிப்பை தடுக்கும்:

வயதானால் வரும் அல்சைமர் நோய் வராமல் காப்பதில் வால் நட் பெரும்பங்கு வகிக்கின்றது. அதேபோல் புற்று நோய் வராமல் காக்கிறது. குழந்தைகளுக்கு வரும் ஹைபர் ஆக்டிவ் பிரச்சனையை குணப்படுத்தும். நரம்பு சம்பந்தபட்ட நோய்களை தடுக்கிறது.

கொலஸ்ட்ரால் குறைக்கும்:

இங்கிலாந்தில் நடந்த ஆராய்ச்சியை தொடர்ந்து ஆண்கள் கை நிறைய வால் நட் சாப்பிடுவதால் ரத்தத்தில் கொழுப்பு அளவு குறைந்து கொலஸ்ட்ரால் சம்பந்தமான நோய்கள் எதுவும் நெருங்குவதில்லை என மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள்.

உடல் எடை குறைய வேண்டுமா?

வால் நட்டில் அதிக அளவு நிறைவுறா கொழுப்பு அமிலங்கள் கொண்டுள்ளது. இவை உடலுக்கு கொழுப்பை குறைத்து, உடலை இளைக்க வைக்கிறது. உடல் உள்ளுறுப்புகளுக்கு பல அளிக்கிறது. துரிதமாய் வளர்சிதை மாற்றத்தை நட்டஹ்துகிறது. அதிக கழுவுகளை, வெளியேற்றுகிறது. உடல் பருமனானவர்கள் தொடர்ந்து இந்த வால் நட் சாப்பிட்டு வந்தால் ஆச்சரியப்படும் வகையில் உடல் எடை குறையும்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*