உறங்கினால் 64 நாட்களுக்குப் பின் கண் விழிக்கும் பெண்..!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

இருபது வயதே நிரம்பிய பெண் நிக்கோல், உறக்கம் என்பது வரம் என்பார்கள் ஆனால், அதுவே இந்த பெண்ணுக்கு சாபமாக அமைந்துவிட்டது.முதல் முறையாக இந்த பாதிப்பு உள்ளது என்பதை இவரது 6 வயதில் தான் உணரமுடிந்ததுள்ளது, ஆறு வயதில் நிக்கோல் ஒருநாளுக்கு 18 மணி நேரம் உறங்கும் தன்மை கொண்டார். இங்கு தான் நிக்கோலின் தாய்க்கு சந்தேகம் எழுந்துள்ளது.

நிக்கோலின் 14 ஆவது பிறந்தநாளின் போது தான் ஓர் பெரிய மாற்றம் நிகழ்ந்தது. தேங்க்ஸ் கிவ்விங் நாளின் போது உறங்கிய நிக்கோல் அடுத்த ஜனவரி மாதம் தான் எழுந்தார். இடையே என்ன நடந்தது என்பது இவருக்கு ஒன்றுமே தெரியாது.இதுபோல இவர் உறங்கும் போது சராசரியாக 22-64 நாட்கள் வரை உறங்குவராம். இந்த இடைப்பட்ட நாட்களில் என்ன நடந்தது என்பது குறித்து நிக்கோலுக்கு ஒன்றுமே தெரியாது.

இதுபோன்ற தருணத்தில் தனது பிறந்தநாள், கிறிஸ்தமஸ், குடும்ப விழாக்கள், உறவினர் மரணம் என பல நிகழ்வுகளை இழந்துள்ளார் நிக்கோல்.ஏறத்தாழ ஒருநாளுக்கு 18 மணிநேரத்திற்கும் மேலாக நிக்கோல் உறங்குகிறார். இடையே இவர் எழுவதே உணவு உண்பதற்கு தான். அதுவும், இவரது தாய் எழுப்ப வேண்டும். அப்படி எழும் போதும், இவரது கண்கள் புகைமூட்டம் போல காணப்படுமாம். இவர் உறக்கத்தில் நடக்கும் வியாதி உள்ளவர்கள் போல தான் இருப்பாராம். நிக்கோலுக்கு நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக இவரது தாய் முனைகிறார்.

நிக்கோலுக்கு இருக்கும் இந்த குறைபாடு உலகில் 1000 பேருக்கு தான் இருக்கிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும், இதற்கு இதுவரை மருத்துவத்தில் எந்த தீர்வும் இல்லை என்றும் மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.ஒவ்வொரு முறை இவர் நீண்ட உறக்க நிலைக்கு செல்லும் போதும், நிக்கோல் மீண்டும் எழுவாளா, இல்லையா? என்ற அச்சம் தன்னுள் தொற்றிக் கொள்கிறது என தன் மனக் கவலையை பகிர்ந்திருக்கிறார் நிக்கோலின் தாய்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*