148 கி.மீற்றர் வேகத்தில் வந்த பந்து.. 121 மீற்றர் சிக்ஸர் அடித்து மிரட்டிய வீரர் – (வீடியோ)

பிறப்பு : - இறப்பு :

அவுஸ்திரேலியாவில் பிக் பாஷ் லீக் டி 20 போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மற்ற நாடுகளைச் சேர்ந்த வீரர்களும் பங்குபெற்று விளையாடி வருகின்றனர்.

இதில் நேற்றைய போட்டியில் பிரிஸ்பேன் ஹீட் மற்றும் ஹோபர்ட் ஹுரிகேன்ஸ் அணிகள் மோதின.

இதில் முதலில் ஆடிய ஹோபர்ட் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 173 ஓட்டங்கள் குவித்தது.

அடுத்து ஆடிய பிரிஸ்பேன் அணி மெக்குல்லம் மற்றும் கிறிஸ்லைனின் அதிரடி ஆட்டத்தால் 3 விக்கெட் இழப்பிற்கு 174 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

இப்போட்டியின் போது 6 வது ஓவரை வேகப்பந்து வீச்சாளர் டைட் 148 கி.மீற்றர் வேகத்தில் வீசினார்.

இதை எதிர் கொண்ட கிறிஸ் லைன் சர்வசாதரணமாக 121 மீற்றர் சிக்ஸர் அடித்து மைதானத்தை விட்டு வெளியேற்றினார், இதைக் கண்ட ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.

இதற்கு முன்னர் கடந்த 2013 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணியைச் சேர்ந்த அதிரடி ஆட்டக்காரர் அப்ரிடி தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது 158 மீற்றர் சிக்ஸர் அடித்ததே சாதனையாக உள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit