தகுதியற்றவர்கள் பதவி நீக்கப்படவுள்ளனர்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

அரச நிறுவனங்கள் திணைக்களங்களில் உயர் பதவி வகித்து வரும் தகுதியற்றவர்கள் அந்தப் பதவிகளிலிருந்து நீக்கப்பட உள்ளனர்.

அரசாங்கத் திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள், சபைகள் போன்றவற்றில் பிரதானிகளாக நியமிக்கப்பட்டுள்ள தகுதியற்ற தலைவர்கள், பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் போன்றவர்களை உயர்பதவிகள் குறித்து பாராளுமன்ற செயற்குழுவின் எதிரில் முன்னிலையாகுமாறு அழைப்பதற்கு கோப் குழுவின் தலைவர் சுனில் ஹந்துனெத்தி கவனம் செலுத்தி வருகின்றார்.

அரச நிறுவனங்கள் நட்டமடைதல், ஊழல் மோசடிகள் தொடர்பில் இந்த பிரதானிகள் நேரடி பொறுப்பு சொல்ல வேண்டுமெனவும் இதனால் இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கோப்குழு தீர்மானித்துள்ளது.

நிறுவனங்களில் உயர் பதவியொன்றுக்கு நியமிக்கப்படுவதற்கு சில தகுதிகளைக் கொண்டிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

அவ்வாறு தகுதிகளைக் கருத்திற் கொள்ளாது அரசியல் நட்பின் அடிப்படையில் உயர் பதவிகளில் அமர்த்தப்படும் போது நிறுவனநங்கள் நட்டமடைவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

முதல் கட்டமாக இரண்டு அரசாங்க நிறுவனங்களில் உயர் பதவி வகிப்போர் நாடாளுமன்றிற்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட உள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத கோப் குழுவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

உரிய தகுதிகளைக் கொண்டிராதவர்கள் அந்தப் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டு தகுதியானவர்களை நியமிக்குமாறு பரிந்துரை செய்யப்பட உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*